CMPC
RELEASES / வெளியீடுகள்

“THE REVOLUTION WILL NOT BE TELEVISED” – ஆவணப்படம் (தமிழில்)

“THE REVOLUTION WILL NOT BE TELEVISED”

(Documentary / ஆவணப்படம்)

Director / இயக்குனர்: Kim Bartley & Donnacha O’briain

Synopsis / சிறு குறிப்பு :

2002 ஆம் ஆண்டு, வெனிசூலா அதிபர் ஹியூகோ சாவேஸ் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆட்சி கவிழ்ப்பையும், அதன் பின்னர் மக்களின் ஆதரவோடு சாவேஸ் மீண்டும் ஆட்சி பொறுப்பேற்றதையும் பின்னனியாகக் கொண்டு இந்த ஆவணப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் மட்டுமே நீடித்த இந்த ஆட்சிகவிழ்ப்பு நிகழ்வில், வெனிசூலாவில் செயல்பட்டு வந்த தனியார் தொலைக்காட்சிகள் எவ்வாறு சாவேசுக்கு எதிராக செயல்பட்டன என்பதை இந்த ஆவணப்படம் விளக்குகின்றது.

2013 ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஹியூகோ சாவேஸ் உடல் நலக்கோளாறு காரணமாக மரணமடைந்தார். மக்கள் தலைவர் சாவேசுக்கு “மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின்” சார்பாக சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள பெஃபி (BEFI) அரங்கில் நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில், “The revolution will not be televised” ஆவணப்படம், தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு, “பொலிவாரியன் புரட்சியும், ஊடகங்களின் புரட்டலும்” என்ற பெயரில் திரையிடப்பட்டது.

(இந்த வெளியீட்டை பெறுவதற்கு எங்களை தொடர்புகொள்ளவும்)

Related posts

2014 – மக்களவைத் தேர்தல் ஒரு பார்வை – புத்தகம்

admin

“பத்திரிகைதுறையின் தொழிற்சங்க செயல்பாட்டில் அனுபவம் பெற்றவரை வாரிய தலைவராக நியமிக்க வேண்டும்”

CMPC EDITOR

“5 BROKEN CAMERAS” – ஆவணப்படம் (தமிழில்)

admin