கொரோனாவால், தொடரும் பத்திரிகையாளர்கள் உயிரிழப்பு. ஊடக நிறுவனங்களின் லாபத்திற்கும் தொழில் போட்டிக்கும் பத்திரிகையாளர்கள் பலி ஆவதா? தமிழக அரசு உடனடியாக தலையிட மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம் கோரிக்கை.
கொரோனா இரண்டாம் அலை கோரத் தாண்டவமாடிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில், நாம் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் நமக்கு நெருங்கியவர்களை இழந்துள்ளோம். இந்த இழப்புகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. கொரோனாவை கட்டப்படுத்த தமிழக அரசு...