“The Revenant” – போராட்டமென்பது வெற்றிக்கானது இல்லை, வாழ்வதற்கானது…

0
680

போராட்டமென்பது வெற்றிபெற இல்லை, வாழ…

“The Revenant”

ப்பா செமயா இருக்கு…. குறிப்பா டிகாப்ரியோ, டாம் ஹார்டியின் நடிப்பு சூப்பர்.

புதிய உலகமான அமெரிக்க மண்ணில் பூர்வகுடிகளான செவ்விந்தியர்களுக்கும், ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களுக்கும் இடையிலான மோதல் காலம் தான் கதைக்களம். இதேபோன்ற மற்ற படங்களில் கலிஃபோர்னியா, நெவோடா, அரிசோனா போன்ற மேற்கு பாலைவனமோ அல்லது கரோலினா, கென்டக்கி, அலபமா போன்ற கிழக்கு பிரதேசங்களையோ தான் பார்த்திருக்கிறேன். இபோதுதான் மேற்கு வட மத்திய பிரதேசங்களான மோண்டானா, டக்கோட்டா போன்ற மாகானங்களில் நிகழ்ந்த கதையை பார்க்கிறேன். அதிலும் குறிப்பாக ரம்மியம் மிக்க ராக்கி மலைத்தொடரின் பின்னணியில் பதைபதைக்க வைக்கும் கொடூரமான காட்சிகள். அடேங்கப்பா.

1800 களில் நிகழும் கதைதான் என்றாலும், அதிலும் வரும் பழைய, அழிக்கப்பட்ட கட்டிடங்கள், தேவாலயங்கள் போன்றவை சிலிர்க்க வைக்கிறது,

செவ்விந்தியர்கள், கரடி, பனி, பசி, துரோகிகள் என படம் முழுக்க ஹியூ கிளாஸ் ( டிகாப்ரியோ ) போராடிகொண்டே இருக்கிறார், உணர்வு பூர்வமான இழப்புகள், மீள முடியாத ஆபத்துகள், நகர்த்த முடியாத உடல் என்று இருந்தாலும் போராடிக்கொண்டே இருக்கிறார். மேன் வர்சஸ் வைல்ட் அல்ல இப்படம் மேன் வர்சஸ் வேர்ல்ட்…

இந்தப்படம் பார்க்கும்போது இரண்டு விசயங்கள் எனக்கு தோணுச்சு

1. போர், போராட்டமெல்லாம் வெற்றிபெற இல்ல, வாழ

2. வழி தவறிய கொலம்பஸ்களுக்கு, வாஸ்கோடகாமாக்கள் எவ்வளவோ பாரவால்ல