
இந்த ஏற்றத்தாழ்வான சமூகத்தில் மன அழுத்தம் என்பது, எல்லோரையும் பாதிக்கக் கூடிய ஒரு நோயாக மாறியுள்ளது. நம்முடைய பிரச்னைகளை பகிர்ந்துகொள்ள நமது நண்பர்கள், சக ஊழியர்கள் உள்ளனர் என்பதையும், இந்த சமூகத்தில் யாரும் தனியாக இல்லை, நம்மை பாதுகாக்க நம்முடன் பலர் உள்ளனர் என்ற நம்பிக்கையையும் ஊட்டுவதன் மூலமுமே இந்த மன அழுத்தத்தை போக்க முடியும்.
ஒவ்வொரு துறையிலும் செயல்படும் சங்கங்களே இந்தப் பணியை சரியாக செய்ய முடியும். அந்த வகையில், திரு.ராஜா அவர்களின் மரணம், பத்திரிகையாளர் சங்கங்கள் அனைவரையும் உள்ளடக்கியதாக, இத்துறையில் பணியாற்றம் அனைவருக்கும் நம்பிக்கையளிக்கக் கூடியதாக வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதை அழுத்தமாக உணர்த்துவதாகவே கருதுகிறோம்.
திரு.ராஜா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக பத்திரிகையாளர்களுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.
இந்த துயுரமான நேரத்தில், அனைவரையும் உள்ளடக்கிய பலமான பத்திரிகையாளர் சங்கங்களை கட்டமைக்க அனைவரும் உறுதி ஏற்போம் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் அழைப்பு விடுக்கிறது.