கடந்த 12.08.22 அன்று சென்னையில் நடைபெற்ற சினிமா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செய்தியாளர்கள் மற்றும் சினிமா பி.ஆர்.ஓ யுவராஜ் இடையே ஒரு கசப்பான நிகழ்வு நடைபெற்றது. இதை கண்டித்து அமைப்பின் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டது. செய்தியளார்களிடம் பி.ஆர்.ஓ மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, செய்தியாளர்கள் மற்றும் பி.ஆர்.ஓ இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பி.ஆர்.ஓ செய்தியாளர்களிடம் வருத்தம் தெரிவித்ததை தொடர்ந்து, அவர்களுக்கிடையில் சமரசம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பி.ஆர்.ஓ செயலை கண்டித்து வெளியிடப்பட்ட அறிக்கையை திரும்பப்பெறுகிறோம்.
இனிவரும் காலங்களில் பணியிடங்களில் அனைவரும் இணக்கமாக செயல்படுவோம் என உறுதியேற்போம்.