CMPC
STATEMENTS / அறிக்கைகள்

பத்திரிகையாளர்களை தொடர்ந்து இழிவுபடுத்திவரும் பாஜக தலைவர் அண்ணாமலையை வன்மையாக கண்டிக்கிறோம்! மன்னிப்பு கேட்கும்வரை ஊடக நிறுவனங்கள் அண்ணாமலையை புறக்கணிக்க வேண்டும்!

பத்திரிகையாளர்களை தொடர்ந்து இழிவுபடுத்திவரும் பாஜக தலைவர் அண்ணாமலையை வன்மையாக கண்டிக்கிறோம்!

மன்னிப்பு கேட்கும்வரை ஊடக நிறுவனங்கள் அண்ணாமலையை புறக்கணிக்க வேண்டும்!

பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் உடனடியாக மௌனம் கலைக்க வேண்டும்!
மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்தல்!

கடலூரில் இன்று (27.10.2022) பாஜக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். இதற்கிடையில், கோயம்புத்தூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது அண்ணாமலை மீதும் பாஜக மீதும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்நிலையில், கடலூரில் ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு, செந்தில் பாலாஜி வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பினர். ஒரு அரசியல் கட்சியின் மாநிலத் தலைவர் என்ற அடிப்படையில், இதற்கு விருப்பப்பட்டால் அவர் பதில் அளிக்கலாம் அல்லது பதில் அளிக்க விருப்பம் இல்லை என்று நாகரீகமாக கூறுவதற்கு அவருக்கு உரிமை உள்ளது. ஆனால், அண்ணாமலையோ, கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களிடம் மிகவும் தரக்குறைவாக நடந்துகொண்டார்.

பத்திரிகையாளர்களை பார்த்து, “மரத்தின் மேல் குரங்கு தாவுவது போல் சுற்றி, சுற்றி வருகிறீர்கள்” என்று கீழ்த்தரமாக பேசிய அண்ணாமலை “ஊரில் நாய், பேய், சாராயம் விற்கிறவன் எல்லாம் கேட்பான் நான் பதில் சொல்ல முடியாது” என்று கோபமாகவும், மிரட்டும் வகையிலும் பேசிவிட்டு சிறிதும் நாகரீகம் இல்லாமல் பத்திரிகையாளர்களை தள்ளிக்கொண்டு அந்த இடத்திலிருந்து வெளியேறினார்.

கடந்த மே மாதம் சென்னை பாஜக அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அண்ணாமலை, கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களைப் பார்த்து பணம் வாங்கிக்கொள்ளுங்கள் என்று மிக மிக இழிவான வகையில் பேசினார். அண்ணாமலையின் இந்த செயலை பத்திரிகையளார் அமைப்புகள் அனைத்தும் கடுமையாக கண்டித்தன. அவரை கண்டித்து சென்னை உட்பட பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. இந்நிலையில், மீண்டும் பத்திரிகையாளர்களை மிகவும் தரக்குறைவாக அண்ணாமலை பேசியுள்ளார்.

அண்ணாமலையின் இந்த நாகரீகமற்ற, கீழ்த்தரமான நடவடிக்கையை மாற்றத்திற்கான ஊடகவியலளார்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

அத்துடன், அண்ணாமலை தரக்குறைவாக பேசியது பத்திரிகையாளர்களை மட்டுமல்ல, பத்திரிகை நிறுவனங்களையும் அதன் ஆசிரியர்களையும் சேர்த்துதான் என்பதை உணர்ந்து, அண்ணாமலை பத்திரிகையாளர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்கும்வரை பத்திரிகை நிறுவனங்கள் அண்ணாமலையை புறக்கணிக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.

தமிழ்நாடு பத்திரிகை ஆசிரிகள் சங்கம் தனது மௌனத்தை கலைத்து, அண்ணாமலையின் இந்த கீழ்த்தரமான நடவடிக்கையை கண்டிக்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.

Related posts

பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் வகையில் அவதூறு பரப்பி வரும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

CMPC EDITOR

வெளிச்சம் தொலைகாட்சியின் கரூர் மாவட்ட செய்தியாளர் கண்ணன் மீது நடந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். சாதிய வன்மத்துடன் பேசியதுடன், தொடர்ந்து பத்திரிகையாளர்களை மிரட்டிவரும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

CMPC EDITOR

சக பத்திரிகையாளருக்காக குரல் கொடுத்த தோழமைகளுக்கு சல்யூட்! தவறுக்கு வருந்துகிறோம் ஜிக்னேஷ்!

CMPC EDITOR