CMPC
STATEMENTS / அறிக்கைகள்

பத்திரிகையாளரை மதத்தின் பெயரைச் சொல்லி கீழ்த்தரமாக பேசிய பாஜவினரை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிகிறது

பத்திரிகையாளரை மதத்தின் பெயரைச் சொல்லி கீழ்த்தரமாக பேசிய பாஜவினரை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிகிறது.

இச்செயல்களில் ஈடுபட்டோர் மீது பாஜக தலைவர் அண்ணாமலை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

‘வணக்கம் இந்தியா’ நாளிதழில் தலைமைச் செய்தியாளராக பணியாற்றி வரும் யூசுப் சென்னை திருவான்மியூர் பகுதியில் வசித்து வருகிறார். அவர் இன்று (12.08.22) காலை தனது மகளை அழைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு புறப்பட்டுள்ளார். ஜெயந்தி பஸ்டாப் பகுதியிக்கு வந்தபோது பாஜகவினரின் இருசக்கர வாகனப் பேரணியை ஒட்டி சாலை முழுவதையும் பாஜக தொண்டர்கள் இருசக்கர வாகனத்தால் மறித்துக்கொண்டு நின்றுள்ளனர்.

அது ஒரு முட்டு சந்து என்பதால், அந்த சாலையை கடந்து போக வேறு வழியில்லாத நிலையில், தனக்கு வழி விடும்படி பாஜக தொண்டர்களிடம் யூசுப் கேட்டுள்ளார். யூசுப் தான் ஒரு பத்திரிகையாளர் என்பதையும், மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறியபோதும், பாஜகவினர் வழிவிட மறுத்துள்ளனர். அப்போது, அங்கிருந்த பாஜக தொண்டர்கள் யூசுப்பின் மகள் பர்தா அணிந்துகொண்டிருப்பதைப் பார்த்து மதத்தின் பெயரால் யூசுபை கீழ்த்தரமாக பேசியுள்ளனர்.

பாஜகவினர் மதத்தை வைத்து இவ்வாறு கீழ்த்தரமாக பேசியதையும், வாகனங்கள் செல்வதற்கு வழிவிடாமல் சாலையை மறித்துக்கொண்டு நிற்பதையும் குறித்து அங்கிருந்த காவல்துறையினரிடம் யூசுப் முறையிட்டுள்ளார். இறுதியாக காவல்றையினர் தலையிட்டு வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தி தந்துள்ளனர்.

சாதி, மத பேதங்கள் கடந்து மக்களுக்கு செய்தியை கொண்டு சேர்க்கும் பத்திரிகையாளர்களை ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள் குறுக்கி, அவர்களை அச்சுறுத்தும் போக்கை பாஜகவினர் இன்று நாடு முழுவதும் செய்து வருகின்றனர். வட மாநிலங்களில் இதுபோன்ற கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் பாஜகவினர் தற்போது தமிழ்நாட்டிலும் அதை செய்யத் தொடங்கியுள்ளனர் என்பதையே இந்த நிகழ்வு காட்டுகிறது.

ஆகவே, பத்திரிகையாளரை மதத்தின் பெயரைச் சொல்லி இழிவுபடுத்திய பாஜகவினரின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது மற்றும் முளையிலே கிள்ளி எறிய வேண்டியது.

பாஜகவினரி இந்த கீழ்த்தரமான நடவடிக்கையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.

மதத்தின் பெயரால் பிரிவினையை தூண்ட நினைக்கும் பாஜகவினரை பத்திரிகையாளர் அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்த்திகள் ஒன்றிணைந்து கண்டிக்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் அழைப்பு விடுக்கிறது.

Related posts

தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தின் நிலைகுறித்து, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கை

admin

நக்கீரன் இதழின் ஆசிரியர் ஆர்.ஆர்.கோபால் கைது, கருத்து சுதந்திரத்தின் மீது விழுந்த சம்மட்டி அடி! அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டிய ஆளுநர், அரசியல் சாசன உரிமை பறிக்கப்படுவதற்கு காரணமாக இருக்கலாமா?

CMPC EDITOR

பத்திரிகையாளர் கொளரி லங்கேஷ்ன் நினைவைப்போற்றுவோம்! கருத்துரிமை காக்க ஒன்றுபடுவோம்!

CMPC EDITOR