காவல்துறையினரால் நோட்டீஸ் அனுப்பப்பட்ட அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் உறுதுணையாக இருக்கும்.

0
676

செப்டம்பர் 16 2014

காவல்துறையினரால் நோட்டீஸ் அனுப்பப்பட்ட அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் உறுதுணையாக இருக்கும்.

மீனவர்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தை தூண்டிவிட்டதாக பத்திரிக்கையாளர்கள் மீது குற்றம்சாட்டுகிறது காவல்துறை. சன் தொலைக்காட்சி, புதிய தலைமுறை, தமிழ்முரசு செய்தியாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது மட்டுமல்லாமல் தொலைபேசியில் மிரட்டியுள்ளார் ராமேஸ்வரம் காவல்துறை கண்கானிப்பாளர் விஜயகுமார்.

காவல்துறையின் மீண்டும் ஒரு வரம்பு மீறிய செயல்பாடு. செய்தியாளர்களை மிரட்டி செய்திகள் மக்களிடம் போய் சேர்வதை தடுத்துவிடலாம் என்று நினைக்கிறது காவல்துறை. நோட்டீஸ் அனுப்பப்பட்ட செய்தியாளர்களுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் அனைத்து வகையிலும் உறுதுணையாக நிற்கும் என தெரிவித்துக்கொள்கின்றோம்