“5 BROKEN CAMERAS”
(Documentary / ஆவணப்படம்)
Director / இயக்குனர்: Emad Burant & Guy Davidi
Synopsis / சிறு குறிப்பு :
இஸ்ரேலின் முற்றுகையின் கீழ் அடைபட்டுள்ள பாலஸ்தீன நாட்டின் மேற்கு கரை பகுதியில் 2005 ஆம் ஆண்டு தன்னுடைய மகனை படம் பிடிப்பதற்காக இமாட் புரண்ட் தன்னுடைய முதல் கேமராவை வாங்குகின்றார். இஸ்ரேல் ராணுவத்தின் அத்து மீறல் காரணமாக அவருடைய கேமரா உடைக்கப்படுகின்றது. அதன் பிறகு அவர் வாங்கிய நான்கு கேமராக்களுக்கும் அதேநிலையே ஏற்பட்டன. கேமராக்கள் உடைந்தாலும், அவை பதிவுசெய்த காட்சிகள், இஸ்ரேலின் அத்துமீறலுக்கான சாட்சிகளாக மாறியுள்ளன. உடைந்த ஐந்து கேமராக்கள் எடுத்த காட்சிகளின் தொகுப்பி இந்த ஆவணப்படம். இமாட் ரண்ட்வுடன் இணைந்து இஸ்ரேலியரான கய் டேவிட்டி இந்த படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2014 ஆம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி அடுத்த ஐம்பது நாட்களுக்கும் மேல், பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 2,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு உலகம் முழுவது எதிர்ப்பலை உருவானது. இந்த சூழ்நிலையில், 03.08.2014 அன்று, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் சார்பாக “காசா கொலைக்களமும், ஊடகங்களின் ஒருதலைபட்சமும்” என்ற தலைப்பில் சென்னை பத்திரிகையாளர் சங்க அலுவலகத்தில் கருத்துப்பகிர்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட “5 Broken Cameras” ஆவணப்படம் திரையிடப்பட்டது.
(இந்த வெளியீட்டை பெறுவதற்கு எங்களை தொடர்புகொள்ளவும்)