வெளிச்சம் தொலைகாட்சியின் கரூர் மாவட்ட செய்தியாளர் கண்ணன் மீது நடந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். சாதிய வன்மத்துடன் பேசியதுடன், தொடர்ந்து பத்திரிகையாளர்களை மிரட்டிவரும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
வெளிச்சம் தொலைகாட்சியின் கரூர் மாவட்ட செய்தியாளராக 2 ஆண்டுகளுக்கு மேலாக கண்ணன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவர் வசிக்கும் பகுதிக்கு அருகில், சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஒரு திருமண நிகழ்வு நடைபெற்றுவருவது குறித்து கரூர்...