சன் நியூஸ் செய்தியாளர் செல்வா மற்றும் ஒளிப்பதிவாளர் வேலுவை திருவண்ணாமலை காவல்துறையினர் பணிசெய்ய விடாமல் தடுத்ததை, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது. காவல்துறையின் அத்துமீறலை அனைத்து பத்திரிகையாளர்களும் ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.
சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து கடந்த செவ்வாய் கிழமை (26.06.18) திருவண்ணாமலையில் மார்க்சிஸ்ட் கட்சி, அலுலவகத்திலிருந்து கறுப்புக்கொடி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை செய்தி சேகரிக்கச் சென்ற மாத்ருபூமி தொலைக்காட்சியின்...