2014 – மக்களவைத் தேர்தல் ஒரு பார்வை – புத்தகம்

0
976

2014 – மக்களவைத் தேர்தல் ஒரு பார்வை

(Book / புத்தகம்)

Writer / ஆசிரியர் : தமிழ்நாடு தேர்தல் கண்காணிப்புக் குழு 2014

Synopsys / சிறு குறிப்பு :

2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்னர், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் முன் முயற்சியால் மூத்த பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் மாணவர்களை உள்ளடக்கிய தேர்தல் கண்காணிப்புக் குழு உருவாக்கப்பட்டது. இந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள், நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றவிதம், கட்சிகள் வழங்கிய வாக்குறுதிகள், வேட்பாளர்கள் தேர்வு, கருத்துக்கணிப்புகள், தேர்தலில் சாதி மற்றும் மதத்தின் பங்கு போன்ற பல்வேறு விஷயங்களை கண்காணித்து, ஒவ்வொரு நபரும் ஒரு குறிப்பிட்ட தலைப்புகளின் கீழ் கட்டுரைகளை எழுதி அவற்றை தொகுத்து புத்தகமாக வெளியிட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, பேராசிரியர் அ.மார்க்ஸ், மூத்த பத்திரிகையாளர்கள் பீர்முகம்மது, தமிழ்க்கனல், மனிதஉரிமை ஆர்வலர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளின் கீழ் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு “2014 – மக்களவை தேர்தல் ஒரு பார்வை ” என்ற இந்த புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இவற்றுடன், 2014 ஆண்டு மக்களவை தேர்தலின் முழு முடிவுகளும் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

(இந்த வெளியீட்டை பெறுவதற்கு எங்களை தொடர்புகொள்ளவும்)