CMPC
POLITICS / அரசியல்

விவசாயிகள் போராட்டம் வெற்றிபெறாது

தமிழ்நாட விடுங்க இந்தியாவுலயே விவசாய போராட்டங்களை சில மொன்னைகளை தவிர யாரும் பெருசா எதிர்க்க மாட்டாங்க. அப்படியொரு நிலை தான் இப்பவும் இந்த நொடி வரையும் நீடித்துக்கொண்டிருக்கிறது.
ஆம். டெல்லி ஜந்தர் மந்தரில் போராடிவரும் விவசாயிகளின் போராட்டத்திற்கும் பெரியளவில் யாரும் எதிர்க்கவில்லை. ஆளும் கட்சி அதிமுகவும் சரி, எதிர்க்கட்சி திமுகவும் சரி அந்த போராட்டத்தை ஆதரிக்கின்றன. பாமக, மதிமுக, விசிக, தமாகா, உள்ளிட்ட தமிழக கட்சிகளும் சரி, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம்ம் பாஜக ( தமிழகம் ) உள்ளிட்ட தேசிய கட்சிகளும் சரி இந்த போராட்டத்தை ஆதரிக்கின்றன.  ஃபேஸ்புக் போராளிகளும் சரி, டுவிட்டர் வீரர்களும் சரி அய்யாக்கண்ணுவை மெய்யா ஆதரிக்கின்றனர். எல்லாருமே ஆதரிக்கின்றனர். எல்லாருமே போய் பார்க்கின்றனர்.
ஆனா ஒன்னும் நடக்கலை, நடக்கவும் நடக்காது.
ஏன் ஏறத்தாழ இதே நிலைதான் சென்ற ஆண்டு ஜல்லிக்கட்டு விவகாரத்திலும் இதே நிலைதான் இருந்தது.  அப்போதும் எல்லா கட்சிகளும் ஆதரித்தனர். எல்லோரும் அதை பற்றியே பேசினர். மாநில மத்திய அரசுகள் உறுதியளித்தன. ஆனா என்ன ஆச்சு.. அதே தான் இப்போதும்.
அதேதான் விவசாயிகள் போராட்டத்தில் இப்போதும்,  எல்லோரும் பேசுவார்கள், ஆதரிப்பார்கள், உறுதியளிப்பார்கள், பரிந்துரை செய்வார்கள்,   ஆனா ஒன்னும் நடக்காது.
அப்போ என்ன செஞ்சா எதாவது நடக்கும்னு ஒரு கேள்வி வரலாம்… மாணவர்கள் இளைஞர்கள், அமைப்புகளெல்லாம் வீதிகளில் திரண்டு போராட வேண்டியது தானே என்று அறிவுறுத்தலாம், ஊடகங்கள் இன்னமும் வெளிச்சம் காட்ட வேண்டும் என திட்டலாம், நடிகர்களை கைகோர்க்க சொல்லலாம். ஆனாலும் வேலைக்காகது.
ஏன்…

இன்னொருமுறை ஜல்லிக்கட்டு மாதிரியான போராட்டம் நடத்தலாமே என்றால், விட்டாத்தானே. அரசு, காவல்துறையில் எல்லாம் சினிமால காட்டுற மாதிரியான டம்மி பீஸுங்க மட்டுமில்லை. நம் கற்பணைக்கப்பாற்பட்ட செயல்களை செய்யும் வலுவான அமைப்பு அது. அதற்கு பலனில்லாத ஒரு பாப்புளஸ்டிக் போராட்டத்தை நடத்த நிச்சயம் அனுமதிக்க மாட்டார்கள்.
அதோடு சும்மா சோறு, விவசாயின்னு சொல்லும் நாம்,  மற்ற விவசாய சங்கங்கள் ஏன் போரடலைங்குற கேள்விக்குள்ள கொண்டு செல்வதன் மூலமா எளிதா திசை திரும்பிடுவோம். அப்படியும் போராடினா, போராடுறவங்களின் மறுபக்கத்தை காட்டி ஈசியா டைவர்ட் பன்னிடலாம்.
எம் மகன்ல வடிவேலு, பரத்த பார்த்து சொல்லுவாரு, உங்கப்பன் மாதிரி இல்லடா எங்கப்பன், எவ்வளவு அழுதாலும் அழுகவிட்டு வேடிக்கை பார்ப்பாருடா…ங்குற காமடி மாதிரி, … நம்ம ஆட்கள் எல்லாம் போராடுறவங்கள  போராடவிட்டு அழகு பார்க்குறவங்க… 16 வருசத்துக்கும் மேல போராடுன இரோம் சர்மிளாவுக்கு 90 ஓட்டு விழுந்தத பார்த்துமா…… இவ்வளவு ஏன்  அதே ஜந்தர் மந்தரில் 13 வருசமா ஒருத்தர் போரடிட்டு வர்ராரு….
நம்ம பிரச்சனைக்கும் தீர்வு என்ன? அதுக்கு என்ன பன்னலாம் ? என்று அறிவியல் பூர்வமா சிந்தித்து செயல்படும் வரைக்கும் ஜாலியா போராட வேண்டியது தான்.

Related posts

தோழர் முத்துக்குமரனுக்கு

CMPC EDITOR

எங்கே நீதி தேவதைகள்?

CMPC EDITOR

மறுக்கப்படும் அன்னையர்கள்

CMPC EDITOR