“விசாரணை” திரைப்படத்திற்கு நடைபெற்ற பாராட்டு விழா.

0
1417

“விசாரணை” திரைப்படத்திற்கு பாராட்டு விழா.

imageimage

வெற்றிமாறன் இயக்கத்தில், வெளியாகியுள்ள “விசாரணை” திரைப்படம், அதிகார வர்க்கத்தின் அத்துமீறலை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. அந்தவகையில், அந்த திரைப்படத்தை இயக்கிய வெற்றி மாறனுக்கு, கடந்த 19.02.2016 அன்று, ஆழ்வார்பேட்டையில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில், இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தடா அப்துல் ரஹீம், மக்கள் குடியரசு கட்சியை சேர்ந்த தோழர் பழனி, “தறியுடன்” நாவலாசிரியர் பாரதிநாதன் ஆகியோர் கலந்துகொண்டு, காவல்துறையால் தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டனர்.

அதன்பின்னர், இயக்குனர் வெற்றிமாறனுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் மோகன், வெற்றிமாறனுக்கு “தறியுடன்” நாவலை, நினைவுப்பரிசாக வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்களுடன், மனிதஉரிமை ஆர்வலர்கள் மற்றும் துணை இயக்குனர்களும் கலந்துகொண்டனர்.