”யுகப்புரட்சி”

0
619

”யுகப்புரட்சி”

என்றோர் வார்த்தை உண்டு

அவ்வார்த்தை உயிர்பெற்றது இன்று…

 

நாட்காட்டி கொண்டு

ஒருபோதும் வரப்போவதில்லை

இது  அக்டோபர்  புரட்சியா ?

இல்லை நவம்பர் புரட்சியா ?

என்ற பூசல்கள், காரணம்

இது மக்கள் புரட்சி !!!

 

அதுவரை கனவாக இருந்த

உழுபவனுக்கே நிலம்!

உழைப்பவனுக்கே அதிகாரம்!! என்ற

முழக்கத்தை, முடித்து காட்டிய

முடி வீழ்த்திய புரட்சி !!!

 

உருக்குளைந்து போயிருந்த

உருஷ்ய தேசத்தை

உயிர்த்தெழெச் செய்து

உயரத்தில் கொண்டுவைத்த புரட்சி !!!

 

உயரத்தில் கட்டப்பட்ட

கூடுபோல் அல்ல அப்புரட்சி

அடியை பற்றிப் பிடித்து

எழுந்து நிற்கும்

விருட்சம் போன்றது அப்புரட்சி !!!

 

வீழ்ந்தால் எழுந்து நிற்கும்

எழுந்தால் விதை பரப்பும்

அப்புரட்சி தான் யுகபுரட்சி!!

  • தேவேந்திரன்