மெட்ராஸ் மற்றும் ஜீவா திரைப்படங்களுக்கு பாராட்டு விழா

0
786
  • சமூகத்திற்கு தேவையான பல்வேறு கருத்துகளை உள்ளடக்கிய மெட்ராஸ் மற்றும் ஜீவா படங்களை இயக்கிய இயக்குனர்கள் பா.ரஞ்சித் மற்றும் சுசீந்திரனுக்கு, 11.10.2014 அன்று சென்னை சிஐடி காலனியில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் மெட்ராஸ் பட இயக்குனர் பா.ரஞ்சித், இயக்குனர்கள் நவீன், “மதுபானக்கடை” கமலக்கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஞ்சித்திற்கும், மற்ற இயக்குனர்களுக்கும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் உறுப்பினர் புருஷோத்தமன் வரைந்த ஓவியம் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. பா.ரஞ்ஜித்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி நினைவு பரிசை வழங்கினார். முக்கிய அலுவல் காரணமாக இயக்குனர் சுசீந்திரனால் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளமுடியவில்லை.