cmpc.in
Statements

மூத்த பத்திரிகையாளர் மற்றும் மார்க்சிய அறிஞர் இரா.ஜவஹர் அவர்களின் மரணம் பத்திரிகைதுறையினருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் மிகப் பெரிய பேரிழப்பு

மூத்த பத்திரிகையாளர் மற்றும் மார்க்சிய அறிஞர் இரா.ஜவஹர் அவர்கள் கொரோனா தொற்று காரணமாக இன்று மரணமடைந்தார். அவருடைய மறைவு, பத்திரிகைதுறையினருக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் மிகப் பெரிய பேரிழப்பு. அவருக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் சார்பாக வீர வணக்கத்தை செலுத்துகின்றோம்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், பத்திரிகையாளர்கள், பொதுவுடமை இயக்கத் தோழர்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

மாற்றத்திற்கான ஊடகவியலளார்கள் மையம், தொடங்கப்பட்ட காலத்தில் அதை கைபிடித்து வழிநடத்தியவர்களில் இரா.ஜவஹர் அவர்கள் மிகவும் முக்கியமானவர்.

வயது பேதமின்றி அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தோழர் இரா.ஜவஹர் அவர்கள், பத்திரிகையாளர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்தவர்.

பத்திரிகையாளர்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்ததுடன், அதற்கு எதிராக களம் கண்டவர்.

அனைவரும் ’அப்பா’ என்று அன்போடு அழைக்கும் அளவுக்கு, அனைவரிடத்திலும் அன்பானவராகவும் நல்ல ஆசானாகவும் இருந்தவர் தோழர் இரா.ஜவஹர்.

பொதுவுடமைச் சிந்தனையாளரான தோழர் இரா.ஜவஹர், தத்துவத்தை எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் புத்தகங்களை எழுதியவர்.

இளம் வயதுமுதல் பொதுவுடமை இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்ட அவர், தனது இறப்புவரையிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்து வந்தவர்.

இரா.ஜவஹர் அவர்களின் மறைவு பத்திரிகைத்துறைக்கு மிகப்பெரிய இழப்பு.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பேரிழப்பு.

அவரை “அப்பா” என்று அன்போடு அழைக்கும் பத்திரிகையாளர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

இரா.ஜவஹர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் அதேவேளையில், அவர் வழி நடந்து, அவர் விட்டுச் சென்ற பணிகளை செய்து முடிப்போம் என்று உறுதி ஏற்போம்.

Related posts

பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் விடுவிக்கப்பட்டார் – முதலமைச்சருக்கு நன்றி – காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம்

CMPC

யூஎன்ஐ (UNI) நிறுவனம் ஆண்டுக் கணக்கில் ஊதியம் வழங்காததால் ஊழியர் திரு. குமார் தற்கொலை! மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் சார்பாக ஆழ்ந்த இரங்கல்!

CMPC

மக்கள் தொலைகாட்சியில் தொழிலாளர்கள் பணிநீக்கம் – மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கண்டனம்

CMPC

Leave a Comment