மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மே தின உறுதியேப்பு விழா நடைபெற்றது.

0
1026

மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 8-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மே தின உறுதியேப்பு விழா ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மூத்த பத்திரிகையாளர்கள் ஜவஹர், குமரேசன், கோவி.லெனின், மணிமாறன், கார்டூனிஸ்ட் பாலா, ஈவேரா ஆகியோர் உட்பட பலர் கலந்துகொண்டனர். இவர்களுடன் பிற பத்திரிகையாளர் அமைப்புகளின் பிரதிநிதிகளும், அமைப்பின் உறுப்பினர்களும், பத்திரிகையாளர்களும் கலந்துகொண்டனர்.

                8ம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் கடந்த கால செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவித்தனர். அமைப்பின் செயல்பாடுகளை வாழ்த்தி பேசிய பத்திரிகையாளர்கள், அனைத்து பத்தரிகையாளர்கள் அமைப்பையும் ஒருங்கிணைத்து பத்திரிகையாளர்கள் அமைப்புகளின் கூட்டமைப்பை உருவாக்க மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் முயற்சி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்றுவதற்கான முயற்சியில் அனைத்து பத்திரிகையாளர்கள் அமைப்பும் இணைந்த செயல்பட வேண்டும் என்றும் மாற்த்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொண்டது.