மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 6வது ஆண்டு தொடக்க விழா மற்றும் மேதினக் கூட்டம்!

0
936

2011 ஆம் ஆண்டு மே மாதம் 1 நாளன்று, சென்னை மேதினப் பூங்காவில், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் வாராந்திரக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், மே 1 ஆம் தேதியை, அமைப்பின் துவக்க நாளாக ஏற்றுக்கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் மேதினக் கூட்டத்துடன், அமைப்பின் ஆண்டு விழாவும் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 6 வது ஆண்டு தொடக்க விழா மற்றும் மேதிக் கூட்டம், கடந்த 28.05.16 (சனிக்கிழமை) மாலை, ஆழ்வார்பேட்டையில் அமைந்துள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மூத்த பத்திரிகையாளர்கள் மயிலை பாலு, தீக்கதிர் குமரேசன் உட்பட பல்வேறு ஊடகங்களை சேர்ந்த பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டனர்.