மதுரவாயல் காவல்நிலையம் முற்றுகை

0
678

• 02.12.2013 அன்று, கேப்டன் டிவி செய்திக்குழு, அதிமுக பிரமுகர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அவர்கள் மீது உரிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று கோரி, மதுரவாயல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் உட்பட பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்துகொண்டனர். ஆனால், இறுதிவரை பத்திரிகையாளர்களின் கோரிக்கையை காவல்துறை ஏற்கவில்லை. இதனால் பத்திரிகையாளர்கள் இரவு சுமார் 10 மணியளவில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களை கைது செய்த காவல்துறை, அன்று இரவு முழுவதும் அவர்களை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்து, மறுநாள் காலை விடுதலை செய்தது. காவல்துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர் அமைப்புகள் ஆர்ப்பாட்டங்களை நடத்தின.