பசியறிந்தவளாக
அப்பாவிடம் காப்பாற்றுபவளாக
செலவுக்கு பணம் தருபவளாக
நிம்மதியாய் தலை சாய்க்க
மடி தருபவளாக
தவறுகள் தெரிந்தும்
தெரியாதவள் போல கண்டிப்பவளாக
ஐ லவ் யூ அம்மா…
செல்லச் சண்டை போடுபவளாக
நான் செய்யும் தவறுகளுக்கு
பொறுப்பேற்பவளாக
தன் பங்கையும் சேர்த்து
எனக்குப் பரிமாறுபவளாக
ஐ லவ் யூ தங்கச்சி …
வாழ்க்கை முழுவதும் உடன் வரப் போகிறவளாய்
எல்லாத் தவறுகளையும் அறிந்தவளாய்
வாழ்வின் வழிகாட்டியாய்
ரத்த உறவு இன்றி சிறு துன்பத்திற்கும்
கண்கள் கசியவளாய்
இரவில் எல்லாமுமாய்
எந்நேரமும் தாயாய்
ஐ லவ் யூ பொண்டாட்டி…
என் அம்மாவின் நகலாய்
மனைவியின் மறுபதிப்பாய்
என்னைப் பிரதி எடுப்பவளாய்
அப்பா பொறுப்பு வழங்கியவளாய்
அம்மாவிற்கு தெரியாமல் செய்யும் தவறுகளுக்கு
கூட்டுக் களவாணியாய்
சொர்க்கம் எப்படி இருக்கும்
என்பதை
வார்த்தைகளில்
உணர்த்திய தோழியாய்
ஐ லவ் யூ மகளே….
– டேனியல் வி.ராஜா