போராட்டம் – தேவேந்திரன்

0
636

காவிரிக்காக போராடாமல்

கல்விக்காக போராடாமல்

தண்ணீருக்காக போராடாமல்

விவசாயத்திற்காக போராடாமல்

ரேசனுக்காக போராடாமல்

பேருந்துக்காக போராடாமல்

சாலைக்காக போராடாமல்

மின்சாரத்திற்காக போராடாமல்

வேலைவாய்ப்புக்காக போராடாமல்

சுற்றுச்சூழலுக்காக போராடாமல்

அடக்குமுறைகளுக்கெதிராய் போராடாமல்

நிர்வாகசீர்கேட்டிற்கெதிராய் போராடாமல்

மாசுபாட்டிற்கெதிராய் போராடாமல்

தீண்டாமைக்கெதிராய் போராடாமல்

மனிதஉரிமைமீறலுக்கெதிராய் போராடாமல்

இனப்படுகொலைக்கெதிராய் போராடாமல்

இன்னும்பலவற்றுக்கெல்லாம் போராடாமல்

போராடாமல், போராடாமல் வாழ்ந்த சமூகம்

இன்று போராடுகிறது!

போராட்டமே வாழ்க்கை

என்று உணர்த்தப்படுகிறது!

எளியவர்களின் வறியவர்களின்

போராட்டம் வாழ்க்கைக்கானது!

அது வலிநிறைந்தது!

அந்த உரிமைக்குரல்

எப்போதும் ஓங்கி

ஒலித்து கொண்டேயிருக்கும்!

ஆனால் அதை

பலித்தோர் இகழ்ந்தோர்

இன்று களத்தில்!

புனிதமே ஆனாலும்

கடவுளே என்றாலும்

போராடித்தான் என்று

அவர்களும் போராட்டக்களத்தில்!

போராடாமல் எதுவுமில்லை

என்று உணர்ந்திருப்பார்கள்!

ஆனால் எதற்காய்

போராடுகிறோம் என்று

எப்போது உணர்வார்கள்?

எதற்காய் போராடுகிறோம்

என்பதில் இருக்கிறது

அந்த சமூகத்தின்தேவை

நீரும் நிலமும்

வேலையும் வாழ்க்கையும்

என்று அடிப்படையே

தீர்க்கப்படாத சமூகத்தில்

எல்லாம் நிறைந்தவர்களுக்குத்தான்

இல்லாதவை தேவையாயிருக்கும்

இல்லை தம்தேவையே

அறியாதவர்களாய் அழுத்தப்பட்டிருப்பர்

இதெப்படி தேவையாய்

உருவானது என்றறிந்து

ஆராய்ந்து உணர்ந்து

அவர்களுக்கும் இருக்கும்

ஓர் பெரும்

பிரச்சனையை களைய

தீர்க்கமான பாதைக்கு

எப்போது திரும்புவார்கள்?

யாரும் எதற்கும்

காத்திருக்க போவதில்லை

வந்தால் நலம்!