CMPC
ART / கலை

போராட்டப் பாடல்கள் – சிபி

 

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் பெரும்பாலானவற்றில் “ஆஜாதி” முழக்கங்கள் எழுப்பப்படுவதை நாம் பார்க்கிறோம். சில வருடங்களுக்கு முன்னர் ஜேஎன்யூ மாணவர்கள் இந்த முழக்கத்தை எழுப்பியதற்காக இந்திய ஊடகங்கள் அவர்களை தேச விரோதிகள் என தேச விரோதிகளாக சித்தரித்தார்கள். ஆனால் இப்பொது இதுவே தேசம் முழுமைக்குமான எதிர்ப்புக் குரலாக உருவெடுத்துள்ளது. ஒரு விதமான இசை கலந்த இந்த ஆஜாதி முழக்கங்கள், பல்வேறு வடிவங்களாக இடத்திற்கேற்றாற்போல் மாற்றப்பட்டு, அடக்குமுறைக்கு எதிராக போராடும் மக்களின் குரலாக மாறுவதை நம்மால் பார்க்க முடிகிறது.

உலகின் பல்வேறு முக்கிய மக்கள் கிளர்ச்சிகளில் இசையும், பாடல்களும் முக்கிய பங்காற்றியுள்ளன. மக்கள் தாங்கள் அனைவரும் உணரும் அடக்குமுறையை, வலியை, அதற்கான எதிர்ப்பை ஒரு சேர வெளிப்படுத்துவதற்கு இந்த பாடல்கள் உதவுகின்றன. இதே உணர்வு நிலையை மக்களிடையே நிலைக்கச் செய்து மேலும் உத்வேகம் அளிக்கவும், பாடலை சேர்ந்து பாடும் போது ஒரு sense of solidarity ஐ உருவாக்கவும் செய்கின்றன.

‘ஹம் தேக்கேங்கே’ Hum Dhekhenge

ஃபைஸ் அகமது ஃபைஸ் என்ற பாகிஸ்தானி கவிஞரால் எழுதப்பட்ட இந்த கவிதை, இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பாலான போராட்டங்களில் இடம்பெறுகிறது. சில வாரங்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் CAA வுக்கு எதிராக பேசிய குலாம் நபி ஆசாத் கூட இந்த கவிதையை மேற்கோள் காட்டினார்.

1979 ஆம் ஆண்டு, அப்போது பாகிஸ்தானில் இருந்த ஜனநாயக ஆட்சியை கவிழ்த்துவிட்டு ரானுவ தளபதியான ஜியா உல் ஹக், சர்வாதிகாரியாக தன்னை அறிவித்துக் கொண்டான். அதுமட்டுமல்லாமல் இஸ்லாமிய அடிப்படைவாத நாடாக பாகிஸ்தானை மாற்றிக்கொண்டிருந்தான். இதை எதிர்த்து கம்யூனிஸ்ட் கவிஞரான ஃபைஸ் அகமது ஃபைஸ், இந்த கவிதையை எழுதினார். ”ஹம் தேக்கேங்கே” என்பதற்கு நாம் பார்க்கத்தான் போகிறோம் என்பதே நேரான அர்த்தம். ‘கயாமத்’ (தீர்ப்பு நாள்) அன்று எல்லாம் மாறும் என்ற இஸ்லாமிய நம்பிக்கையை புரட்சியுடன் உருகப்படுத்தியிருக்கிறார் ஃபைஸ்.

”அந்த ஒரு நாள், நாம் பார்க்கப்போகும் அந்த ஒரு நாள்,

இறைவனின் இருப்பிடத்திலிருந்து போலிகள் எல்லாம் தூக்கி வீசப்படும்,

அந்த புனித தளத்திலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்ட விசுவாசிகளான நாம், ஒரு நாள் உயரத்தில் அமருவோம்,

அந்த ஒரு நாளில் உங்களுடைய அரியனைகள் சரியும், மணி மகுடங்கள் வீசி எறியப்படும்….” என பாடல் தொடரும்.

ஏற்கனவே பிரபலாமாக இருந்த இந்த கவிதையை, பாகிஸ்தானி பாடகியான இக்பால் பானோ 1986ல் நடந்த ஃபைஸின் நினைவுக் கச்சேரியில் பாடினார். ஜியா உல் ஹக்கின் சர்வாதிகார ஆட்சி உச்சத்தில் இருந்த காலம் அது. அவருக்கு எதிரான எதிர்ப்புணர்வு நாடெங்கும் பரவியிருக்க, ஃபைஸ் எழுதிய இந்த பாடலை இக்பால் பானோவின் வலிமையான குரலில் பாடத்தொடங்கினார். பாடலைக் கேட்டவுடன் அரங்கம் பெரும் உற்சாகம் பெற்றது. கச்சேரி நடந்த லாஹூரின் அல்ஹமரா அரங்கத்தின் கூரையே இடிந்து விழும் அளவுக்கு கூட்டம் ஆர்ப்பரித்தது.

இந்த கச்சேரியின் ரெகார்டிங்கை இன்றும் நாம் யூடியூப்பில் கேட்க முடிகிறது. ”சாப் தாஜ் உச்சாலே ஜாயேங்கே!  சப் தக்த் கிராயே ஜாயேங்கே” (உங்களுடைய எல்லா அரியனைகளும் சரியும், உங்களுடைய மணி மகுடங்கள் வீசி எறியப்படும்!) என்ற வரிகளை இக்பால் பானோ பாடும் போது, கூட்டம் உணர்வுப் பெருக்கெடுத்து, பாடலுக்கு இடையே ”இன்குலாப் ஜிந்தாபாத்” முழக்கத்தை எழுப்பும். கூட்டத்தின் முழக்கத்துக்கு ஏற்ப சில நொடிகள் தபலா கலைஞரும் தாளம் போடுவார். இக்பால் பானோ பாடும் இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும், இந்த இடம் நம்மை புல்லரிக்கச் செய்துவிடும்.

இந்த கச்சேரியின் ரெகர்டிங் பாகிஸ்தானிலிருந்து கடத்தப்பட்டு உலகம் முழுவதும் அனுப்பப்பட்டது. பாகிஸ்தானில் நேர்ந்த அடக்குமுறைக்கு எதிராக எழுப்பப்பட்ட இந்த பாடல், இப்போது தேசங்கள் கடந்து இந்திய துணைக்கண்டம் முழுதும் ஒளித்துக் கொண்டிருக்கிறது.

‘வீ ஷால் ஓவர்கம்’ (We Shall Overcome)

இசை முக்கிய பங்காற்றிய ஒரு மக்கள் போராட்டத்தை குறிப்பிட வேண்டுமென்றால் கண்ணை மூடிக்கொண்டு கைகாட்டலாம், அது 1960களில் அமெரிக்காவில் இனவெறிக்கு எதிராக நடந்த போராட்டங்கள் தான் என்று. நிறவெறி உச்சத்தில் இருந்த அமெரிக்காவின் தென் பகுதியில், மாணவர்கள் அமைதி முறையில் அதை எதிர்க்க முயல்கிறார்கள். அத்தனை அச்சுறுத்துதலுக்கும் தாக்குதலுக்கும், அஞ்சாமல் இவர்களை இந்த போராட்டத்தின் நெடுக அழைத்துச் செல்வது இவர்களாது இசையும், போராட்ட பாடல்களும் தான். “அவர்களது பார்வையின் விசாலம் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவு அகன்றிருந்ததால், அவர்கள் பாட ஆரம்பித்தார்கள்” என்கிறார் இந்த போராட்டத்தை குறித்து எழுதியுள்ள ஆனி பிராடன்.

இந்த பாடல்கள் அனேகமும், கருப்பின மக்களின் நாட்டுப்புறப்பாடல்கள் மற்றும் சர்ச் பாடல்கள். இவற்றின் வரிகளை போராட்டத்துக்கு ஏற்ப மாற்றி இந்த மாணவர்கள் பாடத் தொடங்கினார்கள். இந்த ஒட்டுமொத்த இயக்கத்தின் கீதமாக கருதப்படும் “வீ ஷால் ஓவர்கம்” பாடலும், ஆரம்பத்தில் சர்ச் பாடலாக பாடப்பட்டது. பின்னர், 1940களில் தென் கரோலினாவின் விவசாயிகள் தங்களது மறியல் போராட்டத்துக்கு இப்பாடலை பயன்படுத்தினர். இதே பாடலை பாடகரும் நிறவெறுக்கு எதிரான போராளியுமான பீட் சீகர் கையிலெடுத்து நாடு முழுவதும் பரப்பினார். நிற சமத்துவத்துக்கான போராட்டத்தின் குரலாக இந்த பாடல் மாறியது.

இந்த பாடலின் தமிழ் வடிவம் ஞாநியின் நாடகங்களில் பயன்படுத்தப்பட்டது. இது யூடியூப்பில் காணக்கிடைக்கிறது. இது போன்ற எண்ணற்ற நாட்டுப்புற பாடல்களை இவர்கள் தங்களது போராட்டப் பாடல்களாக பயன்படுத்தியுள்ளன.

பெல்ல சியௌ (Bella Ciao)

இத்தாலியில் முசோலினியின் பாசிச ஆட்சியின் போது பார்டிசன்கள் எனப்படும் கொரில்லா போராளிகள் தங்களது பாசிச எதிர்ப்பு பாடலாக இதை பயன்படுத்தினர். இரண்டாம் உலகப் போரின் உச்சத்தில் இந்த போராளிகள் அடக்குமுறை நிறைந்த முசோலினியின் பாசிச ஆட்சியை முறியடிக்க நேச நாடுகளுடன் எதிராக ஆயுதமேந்தி போராடினார்கள். இரண்டாம் உலகப்போரின் முடிவில் இத்தாலியின் முக்கியமான நகரங்களை இவர்கள் பாசிஸ்டுகளின் பிடியிலிருந்து விடுவித்திருந்தனர். நேச நாடுகள் முசோலினியை வீழ்த்த மிகவும் உறுதுணையாக பார்டிசன்கள் செயல்பட்டார்கள். இதற்காக இவர்கள் கிட்டத்தட்ட 50, 000 வீரர்களை பலி கொடுக்க நேர்ந்தது.

இவர்களுக்கு உத்வேகம் அளிக்கும் பாடலாக பெல்ல சியௌ இருந்தது. வடக்கு இத்தாலியின் தோட்டங்களில் வேலை செய்துகொண்டிருந்த பெண்கள் பாடிக்கொண்டிருந்த இந்த நாட்டுப்புறப்பாடலின் வரிகளை மாற்றியமைத்து பார்டிசன்கள் பாடினார்கள்.

”ஒரு நாள் காலையில் நான் விழித்தபோது

ஆக்கிரமிப்பாளார்களைப் பார்த்தேன்,

பார்டிசன் போராளிகளே என்னைக் கொஉ செல்லுங்கள்

நான் பார்டிசனாக மறித்தால் என்னை அந்த மலையின் மீது

ஒரு பூவின் நிழலில் என்னை புதையுங்கள்

வழிப்போக்கர்கள் வியப்பார்கள் “எத்தனை அழகிய பூ” என்று

இது பார்டிசன்களின் பூ.” இதுவே பாடல் வரிகளின் சுருக்கம்.

இந்த பாடல் பின்னாட்களில் மார்க்சிஸ்டுகளால் பயன்படுத்தப்படது. இப்பொது இது ஐரோப்பா முழுவதும் பரவி வரும் வலதுசாரிளை எதிர்த்து போராடும் போராளிகளின் கீதமாகவே மாறிவிட்டது. சமீபத்தில் கூட ’மனி ஹெய்ஸ்ட்’ என்ற நெட்பிலிக்ஸ் சீரியலில் இந்த பாடல் பயன்படுத்தப்பட்டது.

இந்த பாடல்கள் அனைத்தும் இசைத்தட்டுக்களிலும், சபாக்களிலும், பாடகர்களிடமும் மட்டும் மாட்டிக்கொள்ளாமல் மக்களிடையே சென்றன. மக்கள் அவற்றை கையிலெடுத்தனர், எங்கும் பாடிக் களித்தனர். துப்பாக்கிகளுக்கும், லத்திகளுக்கும் பதிலாய் இந்த பாடல்களை உரைத்தனர்.

இதே போல் தமிழ்ச்சூழலில் வலம் வரும் பாடல்களுள் ஒன்று கவிஞர் இன்குலாப் எழுதிய ‘மனுசங்கடா’ பாடல். பல தலித் மற்றும் கம்யூனிச இயக்க மேடைகளிலும் போராட்டங்களிலும் இன்றும் ஒலிக்கிறது இந்த பாடல். இதை நாடெங்கிலும் கொண்டு போய் செர்த்ததற்கு கே.ஏ. குணசேகரனுக்கு பெரும் பங்கு உண்டு. ஆனால், பெரும்பாலான நமது போராட்டங்கள் நமது உண்மையான உணர்வுப்பூர்வமான எதிர்ப்பை பொதுமக்களிடமும் அதிகார வர்க்கத்துக்கும் கடத்த தவறி விடுகின்றன. ஒருவேளை நம்மிடம் போதிய அளாவிலான போராட்ட பாடல்களை இன்னும் எழுதவில்லை என்பது கூட காரணமாக இருக்கலாம்.

வீ ஷால் ஓவர்கம் பாடலை பாடுவதற்கு முன் பாடகர் பீட் சீகர் ஒருமுறை இவ்வாறு கூறினார், “பாடல்கள் தப்பி ஓடக்கூடியவை தோழர்களே! அவை எல்லைகளைத் தாண்டும், சிறைகளில் செழிக்கும், கணமான சுவர்களையும் ஊடுறுவும். சரியான நேரத்தில் பாடப்படும் சரியான பாடல் வரலாற்றையே

Related posts

“பரியேறும் பெருமாள்”… தலித் படமா? ஒடுக்கப்பட்ட மக்களுக்கான படமா? – அருண்மொழி வர்மன்

CMPC EDITOR

போராட்டம் – தேவேந்திரன்

CMPC EDITOR

அம்புகளின் இலக்கு மாத்திரம் இங்கு தவறவில்லை, இந்திய விளையாட்டு வீரர்களின் ஒட்டுமொத்த ஒலிம்பிக்ஸ் பயணமும் தான் – திவ்ய விக்னேஸ்

CMPC EDITOR