புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.

0
503

மார்ச் 12 2014

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலை வன்மையாக கண்டிக்கின்றோம்.

அதிகாலை மூன்று மணிக்கு குண்டுவீச தூண்டும் அளவுக்கு வெறி இருந்திருக்கிறது. கருத்துக்களை கட்டிப் போட இதைவிட பெரிய ஆயுதத்தை கையில் எடுக்கவும் இந்த கும்பல் தயங்காது. பெருமாள் முருகன் வாயால் நான் எழுத போவதில்லை என்று சொல்ல வைத்ததில் தொடங்கி, புலியூர் முருகேசன் தொட்டு, புதியதலைமுறை ஒளிப்பதிவாளரை தாக்கியது வரை தொடர்ந்து கண்டன குரல் எழுப்பி வருகிறோம். போலீசார் இன்று வரை வழக்கம்போல மெத்தன போக்காகவே செயல்பட்டு வருகிறார்கள். கருத்துக்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் கூட்டத்தின் திராணி இன்று குண்டு வீசுவது வரை சென்றிருக்கிறது. இதற்கு மேலும் போலீசாரின் மெளனம் பதிலளிக்காது. கண்டன குரல் கொடுப்போம். கருத்து சுதந்திரம் காப்போம். குண்டு வீசியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும். வீச சொன்னவர்கள் யார் என உண்மையை கண்டறிய வேண்டும். அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அதுவரை ஓயாது எங்கள் போராட்டம். குண்டுவீச்சு சம்பவத்துக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கடும் கண்டனத்தை பதிவு செய்கின்றது.