CMPC
POLITICS / அரசியல்

பரியன், ஆனந்தன், சங்கரலிங்கம் கூட்டணியே சாதி ஓழிப்பை சாத்தியப்படுத்தும்

ப்ளஸ் 2ல என் கூட ஹாஸ்டல்ல தங்கி இருந்த ஒரு பையன உருவத்த வச்சு கிண்டல் பண்ணும்போது,அவங்கெல்லாம் காலனி பசங்கடா,அப்படிதான் இருப்பானுங்கனு சொன்ன ஒரு நண்பன்.இன்னொருநாள், இளவரசன பத்தி பேசும்போது ‘உங்கள பொருத்த வரைக்கும் உங்க ஆளுங்க செஞ்சது சரி’,’என்ன பொருத்த வரைக்கும் எங்க ஆளுங்க செஞ்சது சரினு’ சொல்லி அவ்ளோ பெரிய அநீதிய அவ்வளவு எளிமையா கடந்த ஒரு நண்பன்.இன்னொரு முறை’ரிசர்வேசன் கொடுத்து,இவ்ளோ கம்மியான கட்-ஆஃப் மார்க் வைக்கும்போதுக்கூட எவனுமே படிக்க வர மாட்றானுங்கனு’ ரிசர்வேசன பத்தி நக்கல் பேசுன ஒரு நண்பன்.பள்ளி,கல்லூரிகள்ல எங்களுக்கு அறிமுகமான இவங்க மூனு பேருமே மனதளவுல சங்கரலிங்கங்கள்தான்.

ஒவ்வொரு தடவ காலேஜ் ஃபீஸ் கட்ட முடியாம வெளிய நிக்கும்போதும்,எங்களுக்கு பக்கத்துலயே நின்னது அந்த மூனு பேருதான்.

இன்னும் ஒரு மாசத்துல ஃபீஸ் கட்டிட்றோம் சார், எக்ஸாம் எழுத பர்மிசன் கொடுங்கனு இங்கிலீஷ்ல apology லெட்டர் எழுத சொன்னப்போ,எங்கள போலவே லெட்டர் எழுத தெரியாம நின்னதும் அந்த மூனு பேருதான்.

விலை கம்மியா இருக்க உணவையே பிடிச்ச உணவா மாத்திக்கிட்டு மூனு வேளையும் அதே உணவ சாப்பிட வச்ச சென்னையோட பேச்சுலர் லைஃப்ல,எங்க கூடவே உக்காந்து அந்த உணவ அவங்களுக்கு பிடிச்ச உணவா மாத்திக்கிட்டதும் அந்த மூனு பேருதான்.

காலேஜ்க்கு வெளிய நின்ன சமயத்துல,ஒரு கவர்மென்ட் ஸ்கூல் தமிழ் மீடியம் பையனா ஆங்கிலத்துக்கு கடினப்பட்ட சமயத்துல,வேல கிடைக்காம சாப்பாட்டுக்கு சிரமப்பட்ட சமயத்துல எங்களுக்குள்ள நடந்த உரையாடல்தான் இளவரசனோட சாவ துட்சமா கடந்துப்போனவன,சங்கரோட சாவ தாங்க முடியாம கதறி அழுகுற ஒருத்தனாவும்.அந்த உரையாடல்தான் ரிசர்வேசன பத்தி ஒன்னுமே தெரியாம நக்கல் பேசுன நண்பன அனிதா,வெமூலா, முத்துக்கிருஷ்ணன நாங்க இழந்துட்டு தவிச்சப்போது எங்களுக்கு ஆறுதலா நின்னு அடுத்தக்கட்டமா அரசியல்பூர்வமா செய்யவேண்டியத யோசிப்போம்டானு சொல்லக்கூடிய ஒருத்தனாவும் மாத்துனது.

பரியன் கூட பழகக்கூடாது,பரியன் கூட பேசக்கூடாது.அந்தப் பரியனுங்க புத்தியே அதுதான்டான்ற மாதிரியான ஆகப்பெரிய புத்திமதிகள மட்டுமே கேட்டு வளருகிற சங்கரலிங்கங்கள்தான் இந்த சமூகத்தோட பெரும்பான்மை.

கல்லூரியோட முதல்நாள் பரியன் பக்கத்துல உட்காராம, சங்கரலிங்கம் பக்கத்துல உட்கார்ந்து இருந்தா ஆனந்த் என்னவா இருந்து இருப்பான்?

பரியன சாதிய வச்சு ஒடுக்கிக்கிட்டு இருக்க பத்து பேருல ஒருத்தனாவோ.இல்ல பரியனோட அப்பாவ அசிங்கப்படுத்தும்போது அத கைத்தட்டி ரசிக்கிற ஒருத்தனாவோ.இல்ல மானம்,ரோசம்னு பரியன கொல செய்யத்துடிக்கிற ஒருத்தனாவோ இருந்துட்டு போய் இருப்பான்.

நாம இப்போ தலையில தூக்கி வச்சிக்கிட்டு கொண்டாடுற ஆனந்தா கண்டிப்பா இருந்து இருக்கமாட்டான்.

சங்கரலிங்கத்துக்கும் இங்க பல பிரச்சனைகள் இருக்கு.சங்கரலிங்கமும் இங்க சுரண்டப்படுகிறவன்தான்.சங்கரலிங்கமும் இங்க காலேஜ் ஃபீஸ் கட்ட முடியாம வெளியே நிக்கிறவன்தான்.சங்கரலிங்கமும் Yamaha,TVS மாதிரியான நிறுவனங்கள்கிட்ட கொத்தடிமையா வேலை செய்றவன்தான்.

இடதுசாரிய மனநிலையில் இருக்கிற பரியன்களோட வேலை,இந்த சமூகத்திலிருக்கிற ‘சங்கரலிங்கங்கள’ உண்மைய உணர வச்சு ‘ஆனந்த்களாக’ மாத்துறதும்,ஆனந்த்களோட முக்கியமான வேல தாழ்வுமனப்பன்மையோடு ஒதுங்கியிருக்கிற பரியன்களையும்,ஆதிக்க மனப்பான்மையோடு திரிகிற சங்கரலிங்கங்களையும் இணைக்கிற பாலமாவும் இருக்கறதுதான்.

பரியன்,ஆனந்ந்,சங்கரலிங்கம்..இவங்க மூனு பேரும் சேர்ந்து நடத்துப்போகிற போராட்டம்தான் இந்த சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு சாவுமணி அடிக்கப்போகிற போராட்டமா இருக்கும்.

Related posts

தொழிலாளர்கள் நிலையும்! மே தினத்தின் இன்றைய தேவையும்!!!

admin

கடன்கார நாடும்… கைவிரிக்கும் கார்ப்பரேட்களும்…

CMPC EDITOR

விவசாயிகள் போராட்டம் வெற்றிபெறாது

CMPC EDITOR