பத்திரிகையாளர் ஞானி அவர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது.

0
578

பத்திரிகையாளர் ஞானி அவர்கள் நாடகம், எழுத்து, அரசியல் என்று பல்துறைகளிலும் வல்லுநராக விளங்கியவர். பத்திரிகைதுறையில் நன் மதிப்பை பெற்ற அவர் சமூக விழிப்புணர்வு நாடகங்களை எழுதி, இயக்கியவர். கேணி என்ற பெயரில் நாடகக் குழுவையும் நடத்தி வந்த அவர், பல பத்திரிகைகளில் கட்டுரைகளையும் எழுதி வந்தார். சிறுநீரக கோளாறு காரணமாக பல நாட்களாக அவதிப்பட்டு வந்த ஞானி 15.01.18 அன்று மரணமடைந்தார். ஞானி அவர்களின் மறைவு, பத்திரிகை துறையினர் மட்டுமல்லாமல், ஜனநாயக சக்திகளிடையேயும் பேரிழப்பாகவே பார்க்கப்பட்டது.

மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம், சென்னை பத்திரியைளர்கள் சங்கத்துடன் இணைந்து ஞானி அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யதது. அதன்படி 20.01.18 அன்று, அப்போது சென்னையில் நடைபெற்று வந்த புத்தக கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு அரங்கில், நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், ஞானி அவர்களின் மனைவி பத்மா, ஞானியின் சகோதரரிகள் மற்றும் அவரின் மாணவர்கள் கலந்துகொண்டு ஞானி குறித்த நினைவுகளை பகிர்ந்துகொண்டனர். அத்துடன், பல்வேறு ஊடக நிறுவனங்களை சேர்ந்த ஆசிரியர்கள், மூத்த பத்திரிகையாளர்களும் கலந்துகொண்டு, ஞானியோடு அவர்கள் பணியாற்றிய நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.