CMPC
STATEMENTS / அறிக்கைகள்

நாற்பதிற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், வேலை நீக்கம் செய்துள்ள, வேந்தர் தொலைக்காட்சி நிர்வாகத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்! தொழில் தகராறு சட்டத்தை மதித்து, அனைவருக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்!

நாற்பதிற்கும் மேற்பட்ட தொழிலாளர்களை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், வேலை நீக்கம் செய்துள்ள, வேந்தர் தொலைக்காட்சி நிர்வாகத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்!

தொழில் தகராறு சட்டத்தை மதித்து, அனைவருக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்!

வேந்தர் தொலைக்காட்சியில், பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை, அந்த நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது. கடந்த ஒரு வாரமாக இந்த நடவடிக்கையில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. தொழிலாளர்களை தனித்தனியாக அழைத்து, நாளை முதல் வேலைக்கு வரவேண்டாம் என்று நிர்வாகம் கூறி வருகிறது. வேலை நீக்கத்திற்கான உரியக் காரணத்தையும் நிர்வாகம் கூற மறுக்கிறது.

சமீபத்தில், காவேரி தொலைகாட்சி தன் ஒளிபரப்பை நிறுத்தியதைத் தொடர்ந்து அதில் பணியாற்றிய நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்தனர். மூன்று மாதங்கள் கடந்தும் அவர்களில் பலருக்கும் இதுவரை வேலை கிடைக்கவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில், வேந்தர் தொலைக்காட்சியிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டவர்களும், மாதக்கணக்கில் வேலை இன்றி அலைய வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தொழிலாளர்களுக்கு போதிய கால அவகாசம் கொடுக்காமலும், உரிய இழப்பீட்டை வழங்காமலும், அவர்களை பணிநீக்கம் செய்துள்ளது, தொழில் தகராறு சட்டம் 1947 இன்படி சட்ட விரோதமாகும்.

ஆகவே, பணிநீக்கம் செய்யப்பட்ட அனைவரையும், சட்டத்தை மதித்து, உடனடியாக பணியமர்த்த வேண்டும் என்று, வேந்தர் தொலைக்காட்சி நிர்வாகத்தை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

பணிநீக்க அபாயத்தில் சிக்கியுள்ள வேந்தர் தொலைக்காட்சி ஊழியர்களுக்கு ஆதரவாக, அனைத்துப் பத்திரிகையாளர்களும், அமைப்புகளும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.

Related posts

எஸ்.வி.சேகர் விவகாரத்தில், பத்திரிகையாளார்களுக்கு ஆதரவாக இயக்கத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் கண்டன அறிக்கை.

CMPC EDITOR

பத்திரிகையாளர் சந்தியாவுக்கு எதிராக தொடரப்படும் கீழ்த்தரமான அவதூறு மற்றும் மிரட்டல்களுக்கு எதிராக பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டுமென மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.

CMPC EDITOR

கொரோனா பெருந்தொற்று குறித்த விழப்புணர்வை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியில், தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ராஜ் டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகனுக்கு சிரம் தாழ்த்தி வீரவணக்கம் செய்கின்றோம்! உயிரிழந்த பத்திரிகையாளருக்கு முன்களப் பணியாளர்கள் உயிரிழந்தால் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்!

CMPC EDITOR