நல்ல உள்ளங்களுக்கு நன்றி!

0
734

ராஜ் டிவியில் விசுவல் எடிட்டராக பணியாற்றிய அன்பரசன், கடந்த மே மாதம் 27ம் தேதி தர்மபுரி அருகே நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். இதை தொடர்ந்து மறைந்த அன்பரசனின் குடும்பத்தாருக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி கடந்த ஒரு மாத காலமாக, நம்முடைய துறையில் பணியாற்றும் நண்பர்கள் மற்றும் நல்லுள்ளம் படைத்த புரவலர்கள் ஆகியோரிடம் நிதி திரட்டப்பட்டது. அந்த வகையில் திரட்டப்பட்ட ஐம்பதாயிரம் ரூபாய், சென்னை வந்திருந்த அன்பரசனின் மனைவி நதியாவை நேரில் சந்தித்து வழங்கப்பட்டது.

இந்த தருணத்தில் நிதி வழங்கிய மற்றும்  நிதி திரட்ட உதவிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இந்த நேரத்தில், நாம் பணியாற்றும் நிறுவனங்களில் பணி பாதுகாப்பு என்பதும், நம்முடைய சமூக பாதுகாப்பு என்பதும் உறுதி படுத்த படாத நிலையில் இருப்பதை நாம் அனைவரும் உணர்ந்து அதை உறுதி படுத்துவதற்கான முயற்சியில் ஒன்றிணைய வேண்டும் எனக் கேட்டு கொள்கிறோம். அத்துடன் பத்திரிகையாளர்களுக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் அமைப்புகள் அனைத்தையும், அந்த நோக்கம் நிறைவேறும் வகையில் செயல்படுவதை நாம் அனைவரும் ஒன்றிணைந்து உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டு கொள்கிறோம்.