நடிகர் சங்க தேர்தல்: வாழ்த்தும்! நன்றியும்!

0
704

அக்டோபர் 19 2015

நடிகர் சங்க தேர்தல்: வாழ்த்தும்! நன்றியும்!

எந்த துறையை எடுத்துக்கொண்டாலும், அத்துறையை சார்ந்தவர்களின் நலனை பாதுகாப்பது, சங்கங்கள் மட்டுமே. அந்த சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறாமல் இருப்பதும், முறைகேடாக தேர்தல் நடத்தப்படுவதும் அந்த சங்கங்களின் செயல்பாடுகளை முடக்குகின்றன. இதன் காரணமாக அந்த சங்கங்களை நம்பியிருப்பவர்களின் நலன்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுகின்றன. இந்நிலையில், செயல்பாடுகள் முடங்கிப்போன, முறைகேடு குற்றச்சாட்டுகளுக்குள்ளான தென்இந்திய நடிகர்சங்கத்திற்கு இன்று, ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் வெற்றி தோல்வி என்பதை தாண்டி, இந்த தேர்தல், ஒவ்வொரு துறையினருக்கும், சங்கம் என்பது எவ்வளவு முக்கியமானது, அதற்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்த வேண்டியது எவ்வளவு அவசியமானது என்பனவற்றை மிகத்தெளிவாக உணர்த்தியுள்ளது. அந்தவகையில், தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் அதேவேளையில், கடந்த 9 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாத தென்இந்திய நடிகர் சங்கத்திற்கு, ஜனநாயக முறைப்படி தேர்தல் நடப்பதற்கு காரணமாக இருந்த அனைவருக்கும், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது.