தோழர் மோகனுக்கு வீரவணக்கம்

0
399

 

சென்னை பத்திரிகையாளர் சங்க (MUJ) பொது செயலாளர் மோகன் ஊடகவியலாளர்களின் நலனுக்காக மாற்றத்திற்கான ஊடகவியலார்கள் மையத்தோடு இணைந்து தொடர்ந்து செயல்பட்டவர்.

சென்னை பத்திரிகையாளர் சங்கம்(MUJ) பொது செயலாளர் மோகன் தினகரன் பத்திரிகையில் பணியாற்றிவந்தார். சென்னை திருவல்லிக்கேணியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை உடனடியாக சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர். மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக தெரிகிறது. மோகன் சென்னை தினகரன் பத்திரிகையில் சீனியர் நிருபராக பணியாற்றி வந்தார். அவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். அவரது மறைவுச் செய்தி மாற்றத்திற்க்கான ஊடகவியலாளர்கள் மையத்தினர் உட்பட சக பத்திரிகையாளர்களுக்கு பேரதிர்ச்சியானதாக உள்ளது. சங்கமாதல் குறித்து உணர்த்தியவர்… சங்கங்கள் சரியான நபர்களின் கைகளில் இருக்க வேண்டி உழைத்தவர்… கடைசி வரை பத்திரிகையாளர்களின் நலன் குறித்தே சிந்தித்தவர்… பத்திரிகையாளர் மன்றத்தை (press club) மீட்டு அதை பத்திரிகையாளர் நலனுக்காகன இடமாக மாற்றப் போராடியவர்… நம் நலனுக்காக யோசித்தவர்…

இந்த நேரத்தில் நம் நலனுக்காக அவர் சிந்தித்த, உழைத்த ய, வட்டுச்சென்ற பணிகளை முன்னெடுப்பதே, நாம் தோழர் மோகன் அவர்களுக்கு செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்

வீரவணக்கம்

– மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம்