தொழிலாளர்கள் நிலையும்! மே தினத்தின் இன்றைய தேவையும்!!!

0
771

உலகமயமாக்க சூழலில் மேதினத்தின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. 1886- ல் மே தின தியாகிகள் இரத்தம் சிந்தி பெற்றெடுத்த 8 மனி நேர வேலை மற்றும் உலக தொழிலாளர்களின் நீண்ட நெடிய போராட்டத்தின் மூலம் பெற்றெடுத்த பனி பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலத்திட்டங்கள் இன்றைக்கு பெரும் கேள்விக்குறியாகி வருகிறது. அனைத்து தொழில்களிலும் இன்று இதுதான் நிலைமை! அதிலும் நவீன தொழில்நுட்ப துறையான ஐ.டி தொழிற்சங்கங்களோ அல்லது அவர்களுக்காக போராடும் அமைப்புகளோ பெரிதாக இல்லாத சூழலில் ,நவீன இளம் மென்பொருள் வல்லுநர்கள் கடுமையாக சுரண்டப்படுகின்றனர். இது குறித்து 40 மென்பொருள் நிருவனங்கள் ஆய்வுக்குட்படுத்தி தனியார் தொண்டு நிருவனம் அளித்த அறிக்கை வியப்பாக இருந்தது. குறிப்பாக 27 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட மென்பொருள் வல்லுநர்கள் பெரும்பாலும் இதய நோய் மற்றும் முடக்குவாதத்திற்கு உள்ளாகி மரணமடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி அதிகப்படியான தற்கொலைகள், விவாகரத்துகள், இருதய நோய், இரத்த அழுத்தம் சர்கரை நோய் மற்றும் மன அழுத்தம் இவை அனைத்திற்கும் காரனம் நீண்டநேர வேலை தொடர்ந்து ஒரே மாதிரியான வாழ்க்கை முறை இதுதான் இன்றைய நிலை. அமெரிக்கா,பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் இன்று நம்முடைய நாட்டில் அவுட் சோர்சிங் என்ற முறையில் வேலைகளை கொடுத்து வாங்குகின்றனர் இது சுரண்டலிலேயே பெரும் சுரண்டலாக உருவெடுத்துல்லது உன்மையில் அவர்களது நாட்டில் தொழிலாளர்களுக்கு ஒரு நாள் கொடுக்கப்படும் சம்பலத்தில் 10-ல் ஒரு பங்கு மட்டுமே இங்கு ஊதியமாக கொடுத்துவிட்டு தங்களது ஏக போக லாபத்தை அல்லிக்கொல்கின்றனர். அதிலும் குறிப்பாக ஐடி பார்க் என்று அழைக்கப்படும் பல இடங்களில் நடைபெரும் மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்சன் டேட்டா என்ட்ரி வேலையில் ஈடுபடுபவர்கள் 12 மனி நேர வேலை என்று தந்திரமாக மாற்றிவிட்டனர். இது போன்ற நிலை கணினித்துறையில் மற்றும் இன்றி தொழிலாளி வர்கத்தின் அடிப்படையான ஆலைதுறையிலும் தொழிலாளர்களின் நிலைமை மிகவும் மோசமாக மாறியுள்ளது. தமிழகத்தில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் வாழ்க்கை தரத்தை பாதுகாத்திட பெற்றெடுத்த பல்வேறு நலத்திட்ட உரிமைகள் இன்றைக்கு ஏகாதிபத்திய, உலகமயமாக்கலால் தகர்த்தெறியப்படுகிரது, பாரிக்கப்படுகிறது.
வி.ஆர்.எஸ், சி.ஆர்.எஸ் ரெசசன் என்ற பெயரில் தொழிலாளர்களை வீட்டிற்கு அனுப்பிவிட்டு நிருவனத்தின் பெயரை மாற்றிவிட்டு அதே வேலையை காண்டிராக்ட் என்ற பெயரில் பலைய தொழிலாளர்களை குறைந்த சம்பலத்திர்க்கு வேலைக்கு அமர்த்துவது மற்றும் முறை சாரா தொழிலாளர்களின் எண்ணிக்கை பல்கிபெருகி வருகிறது. இவர்களின் வேலை நேரமும் பனிப்பாதுகாப்பும் பெரும் கேல்லிக்குரியாகவே இருக்கிறது அதிலும் பெரும் நிறுவனங்களிலும் கூட 8 மனி நேர வேலை+4 மனி நேர ஓ.டி என்று 12 மனி நேர வேலையை வாங்கியும் தந்திரப்போக்கே அதிகரித்துள்ளது. அதே போல் வெளி நாடுகளில் பனிபுரியும் தொழிலாளர் நிலைமையும் இதே நிலையில் தான் உள்ளது. எனவே மே தின முலக்கமான 8 மனி நேர வேலை உத்திரவாதம் என்பது சமூக மாற்றத்தோடு இனைக்கப்படக்கூடியது. புரட்சிகர அரசியல் பணியாகவே நம்முன் உள்ளது. மற்றும் தொழிலாளர்கள் வர்க்கமாய் திரளாத சூழலில் முதலாளித்துவம் தனது கொடுங்கரங்களால் தொழிலாளிகளை சுரண்டி கொலுத்துக்கொட்டேதான் இருக்கும். எனவே மார்க்ஸ் – ஏங்கெல்சின் உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற புரட்சிகர முலக்கத்துடன் ஒவ்வொரு மே தினத்தையும் உலக தொழிலாளர்களை அடிமை விலங்குகளில் இருந்து விடுவிக்கும் எழுச்சிகரமான நாளாக மாற்றுவோம்