‘தின செய்தி’ பத்திரிகை நிறுவனம் தனது ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது.

0
604

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும், தினசரி பத்திரிகையான ‘தின செய்தி’யில், பல்வேறு பிரிவுகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ‘தின செய்தி’ பத்திரிகை அதிகார்வபூர்வமாக வெளிவரத்தொடங்கியது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் தொடங்கி ஊழியர்களுக்கு சரியாக ஊதியம் வழங்கப்படவில்லை என்று ஊழியர்கள் தரப்பில் கூறப்படுகின்றது. பலருக்கும் நான்கு மாதங்களுக்கு மேல் ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், அதை கேட்கும் ஊழியர்களை வேலைக்கு வரவேண்டாம் என நிர்வாகம் நிர்பந்திப்பதாகவும் அதில் பணியாற்றும் ஊழியர்கள் கூறுகின்றனர்.

உழைக்கும் தொழிலாளர்களுக்கு உரிய ஊதியத்தை உரிய நேரத்தில் வழங்க வேண்டியது நிர்வாகத்தின் கடமை. தனது கடமையை செய்யத்தவறிய ‘தின செய்தி’ நிர்வாகம், இதை உணர்ந்து உடனடியாக அனைத்து ஊழியர்களுக்கும் வழங்க வேண்டிய ஊதிய பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது.

‘தின செய்தி’ பத்திரிகையில் நான்கு மாதங்களுக்கு மேலாக ஊதியமில்லாமல் பணியாற்றிவரும் நம்முடைய சகோதரர்களின் அவலநிலையை போக்கும் வகையில் அனைத்து பத்திரிகையாளர் அமைப்புகளும் ஒருங்கிணைந்து உடனடியாக ஊதியத்தை வழங்க வேண்டும் என நிர்வாகத்தை வலியுறுத்த வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கின்றது.