தமிழ்நாடு ஊடக ஒளிப்பதிவாளர்கள் சங்கம், (TMCA) தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்கு, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம், மனப்பூர்வமான வாழ்த்துகளை தெறிவித்துகொள்கின்றது!

0
498

செப்டம்பர் 27 2015

தமிழ்நாடு ஊடக ஒளிப்பதிவாளர்கள் சங்கம், (TMCA) தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்கு, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம், மனப்பூர்வமான வாழ்த்துகளை தெறிவித்துகொள்கின்றது!

பொது நலனுக்காக செயல்படும் அமைப்பு, பொதுச்சொத்தை நிர்வாகிக்கும் அமைப்பு, பலர் ஒன்று கூடி ஒரு குறிக்கோளை அடைவதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என, எந்த அமைப்பாக இருந்தாலும், அதற்கு ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில், ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி, அந்த அமைப்பை வழிநடத்தும் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பது மிக முக்கியமான ஒரு நடவடிக்கை. தேர்தல் நடத்தப்படாத மற்றும் முறைகேடாக தேர்தல் நடத்தப்படக்கூடிய எந்த அமைப்பும் சர்வாதிகரத்தால் வழிநடத்தப்படக் கூடிய அமைப்பாகவே இருக்கும். அப்படிப்பட்ட அமைப்புகள், அந்த அமைப்பின் நோக்கத்தை அடையவோ, அமைப்பின் உறுப்பினர்களின் நலனுக்காகவோ நிச்சயம் செயல்படாது. மாறாக, அந்த அமைப்பின் மூலம் பெறப்படும் எல்லா நலன்களும் ஒரு சில நபர்களையே சென்றடையும்.
ஊடகத்துறையினரின் நலனுக்கா தொடங்கப்பட்ட பல்வேறு அமைப்புகள், பல ஆண்டுகளாக தேர்தலை நடத்த தயக்கம் காட்டி வரும் சூழ்நிலையில், தமிழ்நாடு ஊடக ஒளிப்பதிவாளர்கள் சங்கம் (TMCA) தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்திருப்பதற்க்கு எங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கின்றோம். உங்களின் இந்த நடவடிக்கை, தேர்தல் நடத்தாமல் இழுத்தடிக்கும் அமைப்புகளுக்கு ஒரு சாட்டையடியாக அமையும் என்று நாங்கள் கருதுகின்றோம். தேர்தலில், நிர்வாக பொறுப்பிற்கு போட்டியிட்டவர்களுக்கும், வெற்றிபெற்றவர்களுக்கும் மற்றும் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.