ஜி டிவி ஊழியர்களுக்கு வாழ்த்துகள்

0
815

ஜனவரி 13 2014

ஜி-டிவி ஊழியர்களின் உறுதியான போராட்டம் மற்றும் அனைத்து பத்திரிகையாளர் அமைப்புகளின் உறுதுணையின் காரணமாக, நிர்வாகம் பணிந்துள்ளது. ஊழியர்களுக்கு சுமார் 70 சதவீத சம்பள பாக்கி நேற்று வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள சம்பள பாக்கியை ஒரு மாதத்தில் தருவதாக நிர்வாகம் உறுதியளித்துள்ளது. சுமார் 150 ஊழியர்கள் தற்போது வேலையற்ற நிலையில் உள்ளனர். ஆகவே, பத்திரிகையாளர் நண்பர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் வேலைக்கு ஆள் எடுப்பது தெரியவந்தால், ஜி-டிவி ஊழியர்களுக்கு தெரியப்படுத்த வேண்டுகின்றோம். இந்த போராட்டத்திற்கு பல்வேறு வகையில் உதவிய அனைத்து நண்பர்களுக்கும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும், உறுதியுடன் போராடிய ஜி-டிவி ஊழியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.