“சென்னை பத்திரிகையாளர் மன்றம் யாருக்கானது?” – கருத்தரங்கம்

0
859

• சுமார் 16 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாத சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு தேர்தலை நடத்த வலியுறுத்தி, அனைத்து பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர் அமைப்புகளை ஒருங்கிணைத்து 23.08.15 அன்று சென்னை, சிஐடி நகரில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. “சென்னை பத்திரிகையாளர் மன்றம் யாருக்கானது?” என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்தில், பல மூத்த பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டனர். இந்த கருத்தரங்கத்தில் கலந்துகொண்ட அனைத்து பத்திரிகையாளர்களின் ஒப்புதலுடன், சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு தேர்தலை நடத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக 19 பேர் அடங்கிய குழு உருவாக்கப்பட்டது. இந்த குழுவிற்கு, மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையத்தின் நிர்வாகி தமிழரசன், ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். இதற்கு “சென்னை பத்திரிகையாளர் மன்றம் தேர்தல் நடவடிக்கை குழு” என்று பெயரிடப்பட்டது. “சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு நேர்மையாக தேர்தலை நடத்தி முடிப்போம்” என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.