சென்னை பத்திரிகையாளர் மன்றம் AD HOC கமிட்டியின் முதல் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்.

0
681

சென்னை பத்திரிகையாளர் மன்றம் Ad hoc கமிட்டியின் முதல் ஆலோசனைக் கூட்டம், இன்று (24.03.2016) நடைபெற்றது. சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் அனைத்து பத்திரிகையாளர்களையும் உறுப்பினர்களாக சேர்த்த பின்பு, நேர்மையாக தேர்தலை நடத்தி முடிக்க, அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து, கமிட்டி உறுப்பினர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர்.
கடந்த 16 ஆண்டுகளாக பத்திரிகையாளர் மன்றத்திற்கு தேர்தல் நடத்தப்படாத நிலையில், அனைத்துப் பத்திரிகையாளர்களையும் உறுப்பினர்களாக சேர்த்து, தேர்தலை நடத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட Ad hoc கமிட்டியை, பத்திரிகையாளர் மன்றத்தை கைப்பற்றுவதற்காக உருவாக்கப்ட்ட கமிட்டி என, சிலரால் திட்டமிட்டு பரப்பப்பட்டு வரும் அவதூறு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தற்போது மன்றத்தின் நிர்வாகிகள் என்று கூறிக்கொள்பவர்களுக்கு, நேர்மையாக தேர்தலை நடத்தி முடிக்க போதிய கால அவகாசம் வழங்கப்பட்டும், அது நிறைவேறாத பட்சத்தில், அந்தப் பணியை செய்து முடிப்பதற்காகவே Ad hoc கமிட்டி உருவாக்கப்ட்டது என்பதும் கூட்டத்தில் நினைவுகூரப்பட்டது. இருந்தபோதும், Ad hoc கமிட்டி மீது வைக்கப்படும் அவதூறுகளுக்கு, கமிட்டியின் செயல்பாடே பதிலாக அமையும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
அந்தவகையில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் நிர்வாகிகள் என்று கூறிக்கொள்பவர்களுக்கும், Ad hoc கமிட்டியில் பிரதிநிதித்துவம் வழங்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன் பின்னர், முழுமையான பிதிநிதித்துவம் பெற்ற Ad hoc கமிட்டியின் முடிவின் அடிப்படையில், உறுப்பினர் விண்ணப்பங்கள் மீண்டும் சரிபார்க்கப்பட்டு, இறுதி பட்டியல் வெளியிடப்பட்டு, அனைவருக்கும் பொதுவான நபர்களை உள்ளடக்கிய குழுவைக் கொண்டு, தேர்தலை நடத்தி முடிக்கலாம் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
Ad hoc கமிட்டி ஜனநாயக முறைப்படி அமைக்கப்பட்ட கமிட்டி என்பதையும், ஜனநாயக வழிமுறையில் முழுமையாக நம்பிக்கை கொண்ட கமிட்டி என்பதையும், அவதூறு பரப்புபவர்களுக்கு உணர்த்தும் வகையில், மேற்கண்ட முடிவை செயல்படுத்துவதன் முதல் கட்டமாக, வரும் செவ்வாய்கிழமை (29.03.16) அன்று, Ad hoc கமிட்டியை சேர்ந்த உறுப்பினர்கள், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் நிர்வாகிகள் என்று அழைத்துக்கொள்பவர்களை சந்தித்து, கமிட்டியின் முடிவை தெரிவிக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அவர்கள் இந்த முடிவிற்கு ஒத்துப்போகும் பட்சத்தில், Ad hoc கமிட்டியில் அவர்களின் பிரதிநிதிகளையும் உறுப்பினர்களாக சேர்த்துக்கொண்டு, உடனடியாக நீதிமன்றத்தில் உள்ள அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற்று, பொதுவான நபர்கள் அடங்கிய குழுவை உருவாக்கி, அனைத்து பத்திரிகையாளர்களையும் உள்ளடக்கிய, நேர்மையான தேர்தலை நடத்தி முடிக்கலாம் எனவும் முடிவெடுக்கப்பட்டது.