சென்னையில் ஒரு நாள்… – அருண்மொழி வர்மன்

0
1160

சென்னையின் எல்லா முக்கிய ஏரியாக்களிலும், எடுபிடி வேலைகளை செய்ய ஒரு 10 தாழ்த்தபட்டவர்கள் ஒதுக்குபுறமாக வாழ்வார்கள்….

அவர்கள், செருப்பு தைப்பது, எடுப்பு வேலைகளை செய்வது, குடியானவர்கள் தெருப்பக்கம் இழவு செய்தி சொல்வது போன்றவற்றை செய்வார்கள்…. இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு, நகரங்களில் ஆங்காங்கே கிடைத்த சிறு வாய்ப்புகளை பயன்படுத்தி இவர்களில் சிலர் சுய பொருளாதாரத்தை வளர்த்து கொண்டாளும், குடியானவர்கள் தெருக்களில் உள்ளவர்களுக்கு சேவகம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டனர். இவர்களின் அடுத்தடுத்த தலைமுறைகள் படிப்பு என்பதை கட்டாயப்படுத்திக் கொண்டாலும், 10ம் வகுப்பிற்கு மேல் யாரும் தாண்டியதில்லை.

இந்த அட்டியும் அப்படித்தான்… இதுக்கு முன்னாடி இருந்த அட்டியும் அப்படிதான்…

ஆனால் அப்போது எல்லாம் சாவு, சாமி என எந்த ஊர்வலத்தை கொண்டு போனாலும், சண்டைதான். 80களின் இறுதியில் நடந்த பெரிய சண்டைகளுக்குப் பிறகும், பலர் கவர்மெண்ட் வேலைக்கு போன பிறகும் நிலைமை கொஞ்சம் மாறியது.

“பின்ன அவனுங்களுக்கும் எதாவது தேவனா, நம்ம கிட்டதானே வருவானுங்க” இப்போது விடலையாக திரியும் ரகு, ரமேஷ் , வேலாயுதம் கார் ஷெட் ஓரத்தில் உட்கார்ந்து  குடித்துக் கொண்டிருந்தனர்.

“மச்சி, இன்னாடா இவனுங்க எல்லாம் மொக்கயா திருவிழா பண்ணுராங்க, இந்த வாட்டி நாம கெத்து காட்டனும்டா…. ஆமா தியாகு எங்க ?” என கேட்டுக்கொண்டே திரும்பிய வேலாயுதம் தியாகு இன்னும் குடித்து கொண்டிருப்பதை பார்த்து, “டேய் இவன் யாருடா இவன், எப்போ பாத்தாளும் குடிச்சிக்கிட்டே இருக்கான்….”

“இப்போ என்ன உனக்கு, வேலைக்கு போரான் குடிக்கிறான், நீ ஜமாய் டா தியாகெ…” என தன் அண்ணணை பார்த்து சொன்னான் ரகு.

அப்போது, ஏரியா பக்கம் மீன் பாடி வண்டியில் வந்த ஒருவன் “டேய் யார்டா இங்க… சோறு எடுத்து வந்திருக்கேன் வந்து வாய்ன்டு போங்கடா….” என கூவினான்.

அவனுக்கு பதில் ஏதும் கிடைக்காததால், “டேய் என்ன டா எல்லாரும் தூங்க போய்டானுங்களா இந்த ஊர்ல“ என கத்தினான்.

“இவனுங்களுக்கு எல்லாம் என்னடா அவலோ தூக்கம் கேக்குது. நம்ம ஊர்ல எல்லாம் எப்போ கூப்டாலும் வருவானுங்க. இங்க பாரு இதுங்கள…“ என ஏக வசனம் பேசிக்கொண்டிருந்தான்.

அப்போது, சந்துக்குள் இருந்து பாத்திரத்தோடு வந்த ஒரு பெண் சாப்பாட்டுக்கு கைய்ய நீட்டுச்சி. இத பார்த்துட்டிருந்த அட்டி, என்னானு கேட்டுச்சு. அதுக்கு அந்த பொன்னு “இல்லானா சாமி சோறுக்காக கூப்படாங்க அதுதான்..” என இழுத்தாள். உடனே ரகு “யாரு நீ?” என கேட்க “இல்லனா, முனிம்மா மருமக,” என அவள் சொன்னால்.

“இங்க பாரும்மா இப்படிலாம் வாங்க கூடாது. இது தப்பு. உள்ள போ உன் புருஷன வரச் சொல்லு“ என்று சொன்னான். உடனே “ஏய் இந்தா நில்லு, சோத்த வாங்கட்டு போ , என்னால குப்பையில எல்லாம் கொட்ட முடியாது“ என்றான் வண்டிக்காரன்.

உடனே வேலாயுதம், “த்தா யாரு நீ? ஏய் வா போனு பேசுற? யாருடா நீ?”  என கேட்க, திமிரின் உச்சகட்டத்தோடு வந்தவன் சொன்னான் “மோல்யார் வீட்டு கல்யாணத்துக்கு வந்தோம். சோறு மீந்திடுச்சு. அத கீழ கொட்டுவந்தப்போ, சக்கில குடிசை இங்க இருக்குனு சொன்னாங்க. அதான் இதுங்களுக்கு கொடுக்கலாம்னு…” என்று இழுத்தான்.

“இங்க எல்லாம் அப்படி பழங்ககம் இல்ல எடுத்துட்டு போ,” என தியாகு சொன்னான்.

“எடுத்துட்டுபோவா??? சக்கிலி தேவிடியா பசங்களா. குடுகுறத வாங்காம திமிரு பேச்சு வேறயா உங்களுக்கு” என வந்தவன் சொல்லி முடித்த அடுத்த நொடியில் வண்டியை தலைகீழாக கவிழ்த்து போட்டுவிட்டு “ஓத்தா குப்பையில கொட்டுற சோத்த சாப்பிட என்ன நாங்க பிச்சகாரங்களாடா?” என கேட்டு கொண்டே அவனைப் போட்டு செம்ம மாத்து மாத்தினானுங்க.

விஷயம் கேள்விபட்டு கல்யாணத்துக்கு வந்தவுனுங்க அங்க வர, இவங்க அவனுங்களையும் அடிக்க, தூங்கிக் கொண்டிருந்தவுங்க அங்க வர, பெரிய கலவரமாகிடிச்சு.

அப்போ ஒருதன புடிச்சு “இத சக்கில குடிசைனு உனக்கு சொன்னவன் யாருடா? இங்க உன்ன கொடுக்க சொன்னது யாரு?” என கேட்க அவன் ஒருத்தன காட்ட, அவனை அனைவரும் சேர்ந்து கட்டி போட்டு அடிசிட்டாங்க. போலீசு எல்லாம் வந்திடுச்சு. பெரிய கேசு.

அப்போ புதுசா வந்த பொண்ணு முனு முனுப்பாக கேட்டிச்சு “கீழ கொட்ரதா அந்த சாமி குடுத்துச்சு. இது என்னவோ இவுங்க இப்படி கத்துராங்கன“

அது பக்கத்துல இருந்த தனம் சொல்லுச்சு “சாமியா யாரு யாருக்கு? எவனுக்கும் எவனும் சாமி இல்ல. நாங்க எல்லாம் ஒழச்சிதான் சாப்பிடுறோம். ஓசில சாப்பிடல. அதுவும் இங்க இந்த சாதி கூதினு பேசுனா வெட்டனும். உங்க ஊர் மாதிரி இல்ல இங்க. நம்மல அடிமனு நெனச்சா, அவன பொணமாக்கிடுவோம் புரியிதா? இது உங்க ஊரு இல்ல. இது மெட்ராஸ்“ என சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனில் அடிவாங்கிக் கொண்டிருந்த அந்த விடலைகளை பார்க்க சென்றால் தனம்.

இதில் மிகப்பேரிய கொடுமை என்னவென்றால் அடித்தவர்கள் அடிவாங்கியவர்கள் இருவருமே, ஒரே கட்சியை சேர்ந்வர்கள். சாதியத்தை எதிர்த்த அந்த கட்சி, ஆதரித்தது ஆதிக்க சாதியைதான்.

நகரங்களில் சமூக விடுதலைக்காக, மேடை தோறும் முழங்கிய அந்த  கட்சிகள் எந்த சமூகத்திற்கானது என்பது அப்போது தெளிவாகியது. ஆனாலும் இன்னும் அந்த மக்களை ஏமாற்றுவதில் அவர்கள் தங்களை கைதேர்ந்தவர்களாக மாறி வருகின்றனர்.