சவுக்கு இணையதளத்தை முடக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவிற்கு எதிர்ப்பு

0
438

மார்ச் 3 2014

சவுக்கு இணையதளத்தை முடக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவிற்கு எதிர்ப்பு

சவுக்கு இணையதளத்தை முடக்க வேண்டும் என்ற அரசின் (நீதிமன்றத்தின்) முடிவை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் எதிர்க்கிறது. எந்த ஒரு ஊடகத்தையும் கண்காணிப்பதையோ, கட்டுப்பாடுகள் விதிப்பதையோ, தடை செய்வதையோ அரசு செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது, அது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது. அந்த அடைப்படையில் சுதந்திரமாக செயல்பட வேண்டிய இணைய ஊடகங்களை முடக்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பு, கருத்து சுதந்திரத்திற்கு எதிராக தொடர்கதையாகிவிடும் அபயாம் இருப்பதால் அதை கடுமையாக எதிர்க்கிறோம்.

ஒரு ஊடகம் நடத்தப்படுவதற்கு குறைந்த பட்ச சமூக நோக்கம் என்பது இருக்க வேண்டும். அது அச்சி, காட்சி, சமூக ஊடகங்கள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், அதனுடைய நோக்கத்தை பொறுத்தே அதை ஆதரிக்க வேண்டுமா, எதிர்க்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய வேண்டி உள்ளது. கண்மூடித்தனமாக கருத்து சுதந்திரம் என்ற பெயரில் ஆதாரமில்லாமல் தனிமனிதர்களை தாக்கி செய்தி வெளியிடுவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி செய்தி வெளியிடக்கூடியவர்களையும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரானவர்களாகவே பார்க்கிறோம். ஆதாரத்துடன் செய்தி வெளியிடக்கூடிய ஊடகங்களுக்கு அரசு சிறு இடையூறு விளைவிப்பதுகூட கருத்து சுதந்திரத்திற்கு எதிரானதுதான். ஆதாராத்தோடும், சமூக நோக்கத்தோடும் செய்தி வெளியிடக்கூடிய ஊடகங்களை நசுக்கக்கூடாது என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.