சட்டப்பேரவை நிகழ்வுகளை செய்தி சேகரிப்பதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை திரும்பபெறக்கோரி ஆர்ப்பாட்டம்!

0
610

சட்டப்பேரவை நிகழ்வுகளை செய்தி சேகரிப்பதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை திரும்பபெறக்கோரி, அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கங்களை உள்ளடக்கிய “பத்திரிகையாளர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு” சார்பாக, 27.08.2016 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் “பத்திரிகையாளர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு” சார்பாக, கீழ்காணும் அமைப்புகள் கலந்துகொண்டன.

மெட்ராஸ் யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் (MUJ)

தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் (TUJ)

மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் (CMPC)

தமிழ்நாடு ஊடகவியலாளர் சங்கம் (TNOA)

தமிழ்நாடு மீடியா கேமராமேன் ஆசோசியேஷன் (TMCA)

தமிழ்நாடு பிரஸ் போட்டு கிராப்பர்ஸ் அசோசியேஷன் (TNPPA)

இந்திய பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு (CJI)

தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம் (WJU)