கூவத்தூர் வார்டன் சசிகலா

0
1092

“……சந்தி சிரிக்கின்றது. சீ…. சீ…. ஜனநாயகம் படும் பாட்டை பார்த்தீர்களா…. அம்மா அண்ணினு சொல்லுராங்க, ஆனா இவனுங்க பன்ற அநியாயத்த பார்க்க முடியால சீ…. சீ ……”

இது, ஆட்டோ சங்கரின் வாழ்க்கையை தழுவி எடுத்த தொலைகாட்சி தொடர் ஒன்றில் வரும் வசனம். 1980 களில் அதிகார மையங்களுக்கு நெருங்கிய பாலியல் தொழிலதிபராக சங்கரின் இந்த வசனம் இன்றை சூழலுக்கும் பொருந்துகிறது. தமிழகத்தில் இப்போது என்ன நடக்கின்றது என்ற கேள்வி எல்லோரையும் தலையை பிய்த்துக் கொள்ள வைகிறது. சட்டமன்றதிற்கு சென்று வரவேண்டிய மக்கள் பிரதிநிதிகள் சசிகலாவின் “கோல்டன் பே” உள்ளாச விடுதியில் ஓய்வெடுத்து வருகின்றனர். விடுதியில் உள்ள மாணவர்கள் விடுதியில்தான் உள்ளார்களா என்று கண்கானிக்க விடுதியை சுற்றி வரும் வார்டனை போல, தினமும் கூவாத்தூரில் அட்டன்டன்ஸ் எடுகிறார் சசிகலா. எதிர்பக்கத்தில் நாட்டில் புரட்சியை நடத்த போராடி கொண்டிருக்கும் படைத் தளபதி போல கம்பீர சிரிப்புடன் நிற்கிறார் ஓபிஎஸ்.

மதியங்களில் சீரியலில் மூழ்கியிருந்த தமிழகம், நடுநிசி வரை செய்தி தொலைக்காட்சியை மாற்றி மாற்றி பார்த்துகொண்டிருக்கின்றது.  என்ன நடக்கின்றது என்று தெரியாமல் மூழிபிதிங்கியிருப்பது மக்கள் மட்டும் அல்ல ஆளும் கட்சியும் எதிர்கட்சியும்தான்.

குதிரை பேரம் நடந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அதிகார மையத்தின் எல்லா கேவலங்களும் கண்முன் அப்பட்டமாக தெரிகின்றன. இதுதான் மாற்றம் என்று பேசும் அனைவருக்கும், பணம் படைத்தவர்களின் ஜனநாயகத்தை பற்றியும் பணக்காரர்களுக்காக இயங்கும் அரச கட்டமைப்பையும் மக்களுக்கு புரிய வைக்கும் நேரம். ஆனால் இன்று முற்போக்கு இயக்கங்களின் நிலை வருத்ததிற்குரிய நிலையில் உள்ளது. இந்த கட்டமைப்பை எதிர்க்க, கட்டமைப்போடு இணைந்த முற்போக்கவாதிகள், யார் எந்த பக்கம் என்று தங்களின் சார்பு நிலையை தேடிக் கொண்டிருக்கின்றனர்.

அரசாங்கத்தின் செயல்பாடுகள் மீதும் அரசியல் வாதிகள் மீதும் கடுமையான கோபத்தில் உள்ள மக்களுக்கு, பிரச்சனை, அரச கட்டமைப்பை சார்ந்தது என்று புரிய வைக்காமல், மத்திய அரசு தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க போடும் திட்டம் என்றும் இது ஆரிய, திராவிட யுத்தம் என்றும், சசிகலாவை ஆதரித்து வரும் திராவிடர் கழககத்தை பார்க்கும்போது அபத்தத்தை பொருத்துக்கொள்ள முடியவில்லை. திராவிடர் கழகம்தான் இப்படி என்றால், இது கள்ளருக்கும் மறவருக்கும் நடக்கும் உள்சாதி பூசல் என்று இன்னும் சில பெரியாரிஸ்டுகள் வாதம் வைகின்றர்.

திராவிடம்தான் இப்படி என்றால், தமிழ் தேசியம் பேசுபவர்களோ சசிகலாவின் பக்கம் நிற்போம் என்று நடராஜனுக்கு தங்களின் நெடுநாளைய விசுவாசத்தை காட்டிகொண்டிருக்கின்றனர்.  இது, ஓபிஎஸ்சை, அடிமைகள் கூடாரத்தில் இருந்து எழுந்து வந்த ரட்சகன் என்று மயிலாப்பூர் மாமாக்களின் பேச்சிற்கு வலுசேர்கும் வகையிலேயே உள்ளது. ஊழல்கள் பற்றி முதலாளிகளின் ஊடகங்கள் பேசாமல் வாய்மூடி மௌனியாகத்தான் இருக்கும், ஆனால் முற்போக்கு இயக்கங்களுமா???

எம்ஜிஆரின் மறைவுக்கு பிறகு செய்த அதே தவறை தமிழகத்தில் இயங்கி கொண்டு வரும் முற்போக்கு இயக்கங்கள் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னும் செய்து வருகின்றன. இதற்கு முன் கிடைக்காத அரிய வாய்ப்பாக தற்போது அரசாங்கத்தின் செயல்பாடுகளின் மீதும், அரசியல் வாதிகளின் மீது கடும் கோபத்தில் உள்ள மக்களை தங்களுக்கு சாதகமாக மாற்றி கொள்ள வேண்டும். இதை செய்யாதபட்சத்தில் தமிழகம் மீண்டு சீர்திருத்த அரசியலை நோக்கியே செல்லும் என்பதில் ஐயமில்லை.

இன்னும் காலம் கை நழுவவில்லை. அடுத்து வரும் முதல்வரும் ஒரு பொம்மை முதலமைச்சர்தான். ஜெயலலிதாவை துப்பாக்கியுடன் பாதுகாத்த மன்னார்குடிதான் ஆட்சி நடத்தபோகின்றது. அதிகாரவர்கம் அதன் நிலையற்ற தன்மையில் இயங்கும் போதெல்லாம் விடுதலை இயக்கங்கள் வேலைகளை மும்முரப்படுத்த வேண்டும் என்ற தேவை அதிகரிக்கின்றது. இனியாவது சசிகலா சிறை செல்லும் முன் நாடத்திய நாடகத்தில் எடுத்த சபதம் போல் முற்போக்கு இயக்கங்களும் எடுக்குமா????

“அனைத்து மக்களும் அரசியல் தெளிவுபெறாமல் புரட்சி சாத்தியமல்ல என்றால், இன்னும் ஐநூறு ஆண்டுகள் கடந்தும் புரட்சி சாத்தியமல்ல..”குழும்பியவர்களை தெளியவைப்போம், புதிய சமூதாயத்தை படைக்க ஒரு முயற்சி எடுப்போம்.