“காக்கா முட்டை” திரைப்படத்திற்கு நடத்தப்பட்ட பாராட்டு விழா

0
848

ஏற்றத்தாழ்வான சமூகத்தில் சுரண்டப்படும் வர்க்கத்தில் பிறந்த குழந்தைகளின் வாழ்நிலையை அழகாக படம் பிடித்துக்காட்டிய படம் “காக்கா முட்டை”. இந்த படத்தின் இயக்குனர் மணிகண்டனுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் சார்பாக சென்னை, சிஐடி நகரில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் 21.06.2015 அன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில், இயக்குனர்கள் நவீன், “மதுபானக்கடை” கமலக்கண்ணன், பிரம்மா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். “தறியுடன்” நாவலின் ஆசிரியர் பாரதிநாதன், இயக்குனர் மணிகண்டனுக்கு நினைவு பரிசாக தன்னுடைய நாவலின் பிரதியை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களுக்கும் “தறியுடன்” நாவல் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. இவர்களுடன், மூத்த பத்திரிகையாளர் குணசேகரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.