“கவண்” திரைப்படம் குறித்து, இயக்குனர் கே.வி.ஆனந்த் மற்றும் எழுத்தாளர்கள் சுபாவுடன் உரையாடல்

0
915

கவண் திரைப்படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த், எழுத்தாளர்கள் சுபா (சுரேஷ் & பாலகிருண்ணன்) ஆகியோருடனான உரையாடல் நிகழ்வு, 16.04.17 அன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் நடைபெற்றது. மாற்றத்திற்கான ஊடகவியலாளர்க மையத்தின் தலைவர் மணிகண்டன் இந்த நிகழ்வை தலைமையேற்று நடத்தினார். நிகழ்வில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள், “கவண்” திரைப்படம் குறித்த தங்களின் விமர்சனம் மற்றும் பாராட்டுகளை முன்வைத்தனர். பின்னர் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு கே.வி.ஆனந்த் மற்றும் எழுத்தாளர்கள் சுபா பதிலளித்தனர்.

திரைப்படத்தின் ஒரு குறிப்பிட்ட காட்சியில் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் போல் சித்தரிக்கப்பட்டிருப்பதாக முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கே.வி.ஆனந்த் அப்படியொரு என்னத்தில் அந்த காட்சி வடிவமைக்கப்படவில்லை என பதிலளத்தார். நெறியாளரே இல்லாமல் அவரைப்போல உருவத்தைக்கொண்டு மிமிக்ரி மூலம் நிகழ்ச்சியை நடத்துவதுபோன்ற காட்சியை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர்கள், தொழில்நுட்பரீதியாக இது சாத்தியமில்லை என்று கூறினர். இதற்கு பதிலளித்த இயக்குனர், தற்போதைய நவீன தொழில்நுட்பத்தில் இது சாத்தியம் என்று கூறினார். பத்திரிகை உலகத்தின் உண்மை நிலைக்கும், படத்தில் வரும் காட்சிகளுக்கும் இடையிலான இடைவெளி குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த கே.வி.ஆனந்த், வர்த்தக நோக்கில் அந்த காட்சிகள் உருவாக்கப்பட்டதாக கூறினார்.

கே.வி.ஆனந்த் மற்றும் எழுத்தாளர்களுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் சார்பாக நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த பரிசுகளை பத்திரிகையாளர்கள் சாரதா, மிர்னாளினி, தமிழரசி ஆகியோர் வழங்கினர்.