ஒளிப்பதிவாளர் வேல்முருகன் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு

0
783

• கலைஞர் தொலைக்காட்சியில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த வேல்முருகன், 26.08.2014 அன்று இரவு, பணிமுடித்து வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும்போது சாலை விபத்தில் உயிரிழந்தார். வேல்முருகனின் குடும்ப சூழலை கருத்தில்கொண்டு, அவருடைய குடும்பத்திற்கு நிதி உதவி வழங்க மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் முடிவெடுத்தது. இதன்படி, பல்வேறு நல்ல உள்ளங்கள் மற்றும் சக பத்திரிகையாளர்களிடமிருந்து சுமார் 1 லட்சம் ரூபாய் நிதி திரட்டப்பட்டது. 14.09.2014 அன்று, சென்னை பத்திரிகையாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற வேல்முருகனின் நினைவேந்தல் நிகழ்வில், அவருடைய மனைவியிடம் அந்த 1 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில், வேல்முருகனுடன் பணியாற்றி ஒளிப்பதிவாளர்கள் மற்றும் வேல்முருகனின் உறவினர்களும் கலந்துகொண்டனர்.