ஒரு யூத குடிகாரன் – மார்க்ஸ் (அருண்மொழி வர்மன்)

0
381

அவன் ஒரு யூதன்,
கிருஸ்துவனாக மதமாற்றப்பட்டவன்.

அவன் ஒரு குடிகாரன்
குடிகாரர்கள் சங்கத்தின் அங்கத்தினன்

அவன் ஒரு காதலன்
காதலியைவிட
காதலியின் தந்தையுடன்
விவாதிக்கவே நேரம் செலவிட்டவன்.

அவன் ஒரு ஹெகலியன்
ஹெகலியே மறுத்தவன்.
கோழியா முட்டையா என
பேசியவர்கள் மத்தியில்
கருத்தா? பொருளா? என பேசியவன்.

இயக்கத்தை உற்றுநோக்கியவன்
அதை சிந்தித்ததே
பண உலகத்திற்காக இயங்காமல்
மானுடவியலுக்கு உழைத்தவன்.

அவன் ஒரு வாழ்க்கையை வாழ தெரியாதவன்….
வழக்கறிஞன் மகன்,
முதலாளியின் மருமகன்,
லண்டனுக்கு
பிச்சைகார அகதியாய் சென்றவன்.

அவன் ஓரு
ஆலை அதிபரின் நண்பன்
பெற்ற குழந்தைகளை
பசிக்கு திண்ண கொடுத்தவன்.

அவன் பூதங்களை
உறுவாக்கும் மந்திரவாதியாக பார்க்கப்பட்டான்,
மந்திரங்களையும், கடவுள்களையும்
போதித்தவர்களின்
முகதிரையை கிழிக்கவே
அவன் எழுதினான்.

அவனை பலர் சோம்பேறி என்றார்கள்,
ஆனால் சோம்பேறிகளை
பணக்காரர்களாக மற்றிய
உழைக்கும் வர்க்கத்திற்காகவே
அவன் உழைத்தான்.

வறுமையில் வாடியன்,
வறுமையின் காரணம் கண்டுபிடித்தவன்.

அவன் ஒரு அரைகுறை,
மூலதனத்தை
முழுதாய் எழுதும் முன்னரே
முடிந்துபோனான்.

ஒதுக்கப்பட்டவர்களுக்காக
சிந்தித்தான்,
அவர்களின் நடுவிலேயே
சிம்மாசனத்தில் அமர்ந்தான்.

அவன் பின்பற்றப்பட்டான்,
ஆனால் புனிதப்படவில்லை,
லெனினின் ஆசானாகினான்
ஆனால் முற்றுப்பெறாமல்,
லெனினாலேயே வளர்த்தெடுக்கப்பட்டான்.

அவன் சிந்திப்பதை
நிருத்திக்கொண்டான்,
ஆனால் பலரையும் சிந்திக்கவைத்தான்.

அவனுக்கு 200ம் ஆண்டுவிழா கொண்டாடிவிட்டோம்,
ஆனால் இன்றும்
அவன் கல்லறை கல்லடிப்படுகின்றது.

ஆம்
அவன் பிறப்பால் ஒரு யூதன்
அவன் ஒரு குடிகாரன்
ஆனால் இறக்கும்போது
அவன் ஒரு கம்யூனிஸ்ட்.
ஆமாம் அவன் தோழன் மார்க்ஸ்