CMPC
STATEMENTS / அறிக்கைகள்

எஸ்.வி.சேகர் விவகாரத்தில், பத்திரிகையாளார்களுக்கு ஆதரவாக இயக்கத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் கண்டன அறிக்கை.

பெண் பத்திரிகையாளர்களை இழிவாகப் பேசிய எஸ்.வி.சேகரைக் கைது செய்ய வேண்டும் !கண்டித்துப் போராடிய பத்திரிகையாளர்களைப் பழி வாங்கும் முயற்சி நிறுத்தப்பட வேண்டும் !
இயக்கத் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் கண்டன அறிக்கை

—————————————-சென்னை,

ஏப்ரல் 25, 2018

தரங்கெட்டுப் பேசுவதையே ஒரு பண்பாடாக வளர்த்துக் கொண்டுள்ள பா.ஜ.க வைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் சென்ற ஏப் 19 அன்று முகநூலில் பெண் பத்திரிகையாளர்களை மிகவும் கேவலமாக, தரம் தாழ்ந்து இழிவு செய்த ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளதை இங்கே கையொப்பமிட்டுள்ள நாங்கள் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம். அவர் அப்படிச் செய்ததை இதுவரை அவரது கட்சியைச் சேர்ந்த யாரும் கண்டிக்கவும் இல்லை. சேகர் மீது வழக்குப் பதியப்பட்டிருந்தாலும் அவரை இன்றுவரை கைது செய்யாமல் அவர் முன் ஜாமீன் பெற்று விடுதலை ஆவதற்கான வாய்ப்பைத் தமிழகக் காவல் துறை அவருக்கு அளித்து வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளது.

இந்நிலையில் சென்ற ஏப்ரல் 20 அன்று சேகரது வீட்டு வாசலில் அவரது இந்த ஆபாச அவதூறுப் பதிவைக் கண்டித்து ஆர்பாட்டம் செய்த பத்திரிகையாளர்கள் 30 பேர்கள் மீது இன்று கலவரம், கடும் ஆயுதங்களால் தாக்குதல், கொலை மிரட்டல் முதலான குற்றப் பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் வழக்குத் தொடரப்பட்டுள்ள இந்த 30 பத்திரிகையாளர்களையும் பணி நீக்கம் செய்ய இன்று அவர்கள் பணி செய்யும் ஊடக நிறுவனங்களுக்கு பா.ஜ.க தரப்பிலிருந்து அழுத்தம் கொடுப்பதாகவும் அறிகிறோம்.

பத்திரிகையாளர்கள் மீது தொடுக்கும் இத்தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம். ஜனநாயக நிறுவனங்கள் எல்லாவற்றின் மீதும் இன்றைய மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுவரும் தாக்குதலில் ஓர் அங்கம்தான் இது. ஒரு காலத்தில் இதழியல்துறை என்பது மேற்தட்டினரின் கைகளிலேயே இருந்தது. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிகளின் ஊடாகப் பெரிய அளவில் பெண்களும், அடித்தள மக்களும் பத்திரிக்கைத் துறையில் பங்கேற்றிருப்பதையும், அவர்கள் சுய மரியாதையுடன் செயல்பட்டு வருவதையும் பா.ஜ.கவினரால் சகிக்க இயலவில்லை. அதன் விளைவே தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மீதான இந்தத் தாக்குதல்.

கருத்துரிமையிலும், ஜனநாயக நிறுவனங்களிலும் நம்பிக்கையுள்ள நாங்கள் இதைக் கண்டிக்கிறோம்.
ஆபாசப் பதிவுகளைத் தொடர்ந்து செய்து வரும் எஸ். வி. சேகரை காவல்துறை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.
பத்திரிகையாளர்கள் மீதான வழக்கு நீக்கப்பட வேண்டும்.

பா.ஜ.க மற்றும் அரசுத் தரப்பு அழுத்தங்களுக்குப் பணிந்து ஊடக நிறுவனங்கள் தம் ஊழியர்கள் மீது ஏதும் நடவடிக்கை எடுக்கக் கூடாது எனவும் ஊடக நிர்வாகிகளை இங்கே கையொப்[பமிட்டுள்ள நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

1. தியாகு, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், சென்னை,
2. பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், சென்னை,
3.பேரா. கல்விமணி, மக்கள் கல்வி இயக்கம், திண்டிவனம்
4. ஆ.காலித் முஹம்மது, மாநிலப் பொதுச்செயலாளர், பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா,
5. ராஜன்குறை கிருஷ்ணன், பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், டெல்லி
6. சுபகுண ராஜன், ஆசிரியர், காட்சிப்பிழை, சென்னை,
7. ஆளூர் ஷாநவாஸ், துணைப் பொதுச்செயலாளர், வி.சி க, சென்னை,
8. தமிழ்க்கனல். சென்னை பத்திரிகையாளர் சங்கம், சென்னை,
9. பேரா. முனைவர். ப.சிவக்குமார், அரசு கல்லூரி முதல்வர் (ஓய்வு), சென்னை,
10. வி.சீனிவாசன், சுற்றுச் சூழல் ஆர்வலர், சென்னை,

11. மீ.த.பாண்டியன், தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி,

12. பேரா,அ.மார்க்ஸ், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு,
13. அப்துல் ரசாக், மக்கள் தொடர்பாளர், பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா, சென்னை,
14. மணிமாறன் வைரவன், பொருளாளர், பத்திரிகையாளர் சங்கம், சென்னை

15. ப.கவிதாகுமார், தீக்கதிர், மதுரை

16. கோ. சுகுமாரன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, புதுச்சேரி

17. சேக் அன்சாரி, மாநிலத் துணைத் தலைவர், பாபுலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா,

18. அருள் எழிலன், பத்திரிகையாளர், சென்னை,
19. ஷோபா சக்தி, எழுத்தாளர், பாரிஸ்,
20. அமுதன் ராமலிங்கம், திரைத்துறை, சென்னை,
21. சுகுணா திவாகர், பத்திரிகையாளர், ஆனந்தவிகடன், சென்னை
22. சிவக்குமார், சமூக ஆர்வலர், பெங்களூரு
23, டாக்டர் திருஞானம், விஞ்ஞானி, பெங்களூரு
24. முருகப்பன், பத்திரிகையாளர், திண்டிவனம்,
25. முகம்மது சிராஜுதீன், மேலாளர், பாரதி புத்தகாலயம், சென்னை,

26. நீதிராஜன், காயிதே மில்லத் ஊடகக் கல்லூரி, சென்னை

27. பேரா.ஹாஜாகனி, காயிதேமில்லத் கலைக் கல்லூரி, சென்னை
28. கவிஞர் ரியாஸ் குரானா, எழுத்தாளர், இலங்கை,
29. முத்துகிருஷ்ணன் , எழுத்தாளர், மதுரை,

30. குமரன் தாஸ், எழுத்தாளர், காரைக்குடி,

31. பா.ஜீவசுந்தரி, எழுத்தாளர், சென்னை.

32. ரஜினி, வழக்குரைஞர், மதுரை

33. பேரா. மு. திருமாவளவன், அரசு கல்லூரி முதல்வர் (ஓய்வு), சென்னை

34. கி. நடராசன், வழக்குரைஞர், சென்னை
35. வெளி.ரங்கராஜன், எழுத்தாளர், சென்னை,
36. ஜமாலன் தமிழ், எழுத்தாளர், சென்னை,
37. பாலகுருசாமி, மருதா பதிப்பகம், சென்னை,
38. செண்பகவல்லி ராஜகோபால், மனித உரிமை இயக்கம், மதுரை,
பா. வெங்கடேசன், எழுத்தாளர், ஓசூர்,
39. அகமத் ரிஸ்வான், எழுத்தாளர், சென்னை,
40. நெல்சன் பாபு, தீக்கதிர் நாளிதழ், சென்னை,
41. சிவகுருநாதன், கல்வியாளர், திருவாரூர்,
42. அருண்மொழி, திரைப்பட இயக்குநர், சென்னை,
43. தங்க ரமேஷ், புதிய நாளிதழ், சென்னை,
44. பெரியசாமி, எழுத்தாளர், ஓசூர்,
45. நிழல்வண்ணன், எழுத்தாளர், கோவை,
46. ராஜன், சிற்பி, சென்னை,
47. நீலகண்டன், கருப்புப் பிரதிகள், சென்னை,
48. வேடியப்பன், சமூகப் பணியாளர், தருமபுரி,
49. ஸ்ரீராம் கிருஷ்ணன், சமூக ஆர்வலர், சென்னை,
50. மணி மதிவண்ணன், கவிஞர், ஈரோடு,
51. முகவை முஸ்தஃபா, அத்திப்பூ மாத இதழ், சென்னை,
52. கவிஞர் மனுஷ்யபுத்திரன், எழுத்தாளட், பதிப்பாளர், அரசியல் டெயல்பாட்டாளர், சென்னை,
53. உண்மைத் தமிழன், எழுத்தாளர், சென்னை,
54. யமுனா ராஜேந்திரன், எழுத்தாளர், லண்டன்,
55. பாஸ்கர் சக்தி, எழுத்தாளர், சென்னை,
56. மீனா, எழுத்தாளர், திருவண்ணாமலை,
57. தமயந்தி, எழுத்தாளர், சென்னை,
58. ஜி.காரல் மார்க்ஸ், எழுத்தாளர், கும்பகோணம்.
59. ஜி.பி.இளங்கோவன், எழுத்தாளர், கும்பகோணம்
60. சரா.சுப்பிரமணியம், பத்திரிகையாளர், சென்னை,
61. மோ.அருண், பதிப்பாளர், செயல்பாட்டாளர், சென்னை,
62. மு.வி.நந்தினி, பத்திரிகையாளர், சென்னை,
63. அருண் பகத், இயக்குநர், சென்னை,
64. யூசுஃப் ராஜா, சமூக ஆர்வலர், ஒரத்தநாடு.
65. ராஜசங்கீதன், எழுத்தாளர், சென்னை,
66. பேரா. சே. கோச்சடை, எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், காரைக்குடி,
67. முஹமது இப்ரஹீம், சமூக ஆர்வலர், சென்னை,
68. ஜெயச்சந்திரன் ஹஷ்மி, இயக்குநர், சென்னை,

தொடர்பு முகவரி : அ.மார்க்ஸ், 3/5, முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், அடையாறு, சென்னை-20, எண்: 9444120582, [email protected]

Related posts

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது

CMPC EDITOR

ஜி டிவி ஊழியர்களுக்கு வாழ்த்துகள்

admin

பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிவரும் எச்.ராஜாவை புறக்கணித்த நாகர்கோவில் பத்திரிகையாளர்களை மாற்றத்திற்கான ஊடகவியாளர்கள் மையம் நன்றியுடன் வணங்குகிறது

CMPC EDITOR