‘எப்போதும் மக்களை தூற்றுதல் தவறு’- திவ்யா

1
1152

உரிமையென்றும் கடமையென்றும் உரியேற்றி,

சாமானியனுக்கு வாக்காளனென்னும் அரிதாரம் பூசி

ஒரு நாள் கூத்தாம் தேர்தலில்

அவன் விரலுக்கு மட்டுமன்று

அடுத்தய்ந்தாண்டுகள் அவன் வயிற்றிலும் மைபூசி

வயிறு வளர்க்கும் சில வெண்சட்டை இழிபிறப்புகள்

இன்று அவன் முகத்திலும் உமிழ

தொடங்கிவிட்ட நிலையை

நிச்சயம் நாமும் அறிதல் கடமை

அதற்கு முன்னர்,

சற்று நம் முகத்தையும்

துடைத்தல் அவசியம்…

எத்தனை எளிதாக வருகிறது வார்த்தைகள்

வெகுஜனத்திற்கு எதிராக,

என்னை பணம் வாங்கிக்கொண்டு,

ஓட்டு போட்டவனென்று சொல்வதற்கு

உனக்கு கருத்து சுதந்திரம் இருக்குமென்றால்

சொன்னவன் நாக்கறுக்கும் உரிமை கேட்டு

தொடரவேண்டும் நமது அடுத்த போராட்டங்கள்.

‘எப்போதும் மக்களை தூற்றுதல் தவறு’ என்றார் மார்க்ஸ்

அவ்வாறாகவே கொள்வோம்

-திவ்யன்