என்னைத் தீண்டிய ‘தீண்டாத வசந்தம்………’ – அருண்மொழி வர்மன்

0
1584

               யாரும் தீண்டாத அந்த நிலாதிண்ணை கிராமத்தின் தீண்டபடாதவர்களின் வாழ்க்கையை பதிவு செய்த படைப்பு தீண்டாத வசந்தம். கல்யாண்ராவ் தொகுத்த தலைமுறை புரட்சிகளின் தொகுப்பை, தண்மைமாறாமல் மொழிபெயர்த்து தமிழ் இலக்கிய உலகில் ஓடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு மிக சிறந்த படைப்பை அளித்தவர் தோழர் எத்திராஜூலு. இந்திய சமூகத்தில் சாதிய கட்டமைப்பில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு, மார்க்சியம்தான் தீர்வு என்பதை சுட்டிகாட்டும் இந்த நாவலை, வெறும் மொழி அறிவோடு மட்டுமின்றி அரசியல் புரிதலோடும் மொழிபெயர்த்திருப்பார் தோழர் எத்திராஜூலு. அவரின் மறைவு தமிழ் இலக்கியத்திற்கு மட்டுமல்ல, புரட்சிகர சிந்தனையாளர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய இழப்பு.

 

தோழர் எத்ததிராஜூலூ நடையின் பாதிப்பில், தீண்டப்படாத அந்த புரட்சியாளர்களின் ஒரு சிறு வரைவு……..

 

1. நாரிகான் மற்றும் மாத்தைய்யா  வெள்ளத்தில் அடித்து சென்றுகொண்டிருந்த பறை சேரி மற்றும் சக்கிலிய சேரிகளிலிருந்து மக்களை காப்பாற்றி, பறையர் மேட்டை அவர்களுக்கு வழங்கிய நிலா திண்ணையின் முதல் புரட்சியாளர்கள்.

2. நாகன்னா  நாரிகானின் மகன் – கலை, புரட்சியின் வடிவம் என்பதை உணர்த்தியவர். மேல் சாதிகாரர்களுக்கு மட்டும் நடத்தபட்ட கூத்தை, பறையருக்கும் சக்கிலியருக்கும் கொண்டுவந்த புரட்சியாளன். உலகத்தில் முதல் முறையாக “பெருமதிப்பிற்குரிய பறைசேரி நாட்டாண்மை மற்றும் பெருமதிப்பிற்குரிய சக்கிலியச்சேரி நாட்டாண்மை அவர்கள் ஆசனத்தில் அமர்ந்தார்களா???” என கேட்ட கலைஞர்.

3. எல்லண்ணா, சுபத்திரா  நாகன்னாவின் சீடன் எல்லண்ணா. எல்லண்ணா மனைவி சுபத்திரா. எல்லண்ணா, கலைவளர்த்த கலைஞன். சுபத்திரா வாழ்கையோடு மட்டும் அல்ல சாதி பேய்களோடும் போராடிய புரட்சி பெண்.

4. குயவன் கோடிஸ்வரன்  வெறும் 5% மக்களின் கலையை 95% மக்களின் கலையாக சித்தரிக்க முயன்றபோது, 95% மக்களின் கலையை ஆவணப்படுத்த முயன்று, சாதி வெறியர்களால் உயிரிழந்த வரலாற்று ஆய்வாளன்.

5. சிவய்யா(எ) சீமோன்  மதம் மாறினாலும் மனிதன் சாதி மாற முடியாது என்பதை நமக்கு காட்டியவன் . பசியும் பட்டினியும் தென்னகத்தை சூழ்ந்த போது இறந்த தன் தாயையும் தந்தையும் ஒரே குழியில் புதைத்துவிட்டு, கிராமத்தைவிட்டு வெளியேறியபோது, தன்னை விட்டு சொந்தங்கள் பிரிந்த பின்பும், சாதி பிரியாததை உணர்ந்தவன். சாதி, மதத்தையும் தாண்டியது என்பதை உணர்ந்தவன்.

6. ரூபேன்  சிவய்யாவின் மகன். தந்தை யார் என்று வெகு காலம் தெரியாதவன். வரலாற்றின் முக்கியதுவம் கருதி அதை தேடிச் சென்ற வரலாற்று ஆய்வாளன். தான் யார் என்பதை தன் சுற்றதிற்கு சொன்னவன். விடுதலையை நோக்கி தன் மகன் சென்ற போதும், தன் பேரன் சென்றபோதும் அதை பெருமையாக எண்ணியவன். விட்ட வரலாறை இழுத்துக் கட்டியவன்.

7. ரூத்  ரூபேனின் மனைவி. கதையை நமக்கு சொல்பவள் (கதை சொல்லி). புரட்சியில் பெருமிதம் கொள்பவள். மகன் இறந்தபோதும் விடுதலைக்காக பேரன் சென்றபோதும் பெருமிதம் கொண்டவள். வரலாறு அறிதலே விடுதலைக்கான தொடக்கம் என்றவள். வஞ்சிக்கபட்டவர்களுக்காக வாழ்ந்த நிலாக்குருவி.

8. ராமானுசம்  அவலபாட்டில் சிலுவைபாடு சுமந்த தீண்டப்படாத மக்களுக்கு தண்ணீர் பெற்று தந்த தோழர். காந்தியின் காமெடிகளை கலாய்ப்பவர். சரியான அரசியலோடு போராடிய போராளித் தோழர்.

9.சுப்பராயன்  அவலபாட்டில் சிலுவைபாடு சுமந்த போராளி. இவரை விளக்க இவர் பேசிய ஒரு வாசகம், “எல்லாம் மாறிப்போச்சு சார். மொதல்ல “சிப்பெய்(சி.பி.ஐ))”அப்பரம் “சிப்பெம்(சி.பி.எம்)” இப்போ ஏதோ போகுது சார். ஆனா”நக்சைட்(நக்சலைட்)” ரொம்போ நல்லவர் சார்” இது எழுத்து பிழை அல்ல அவன் பேச்சு மொழி.

10.இமானுவேல்  ரூத் ரூபேன் ஆகியோரது “நக்சலைட்” மகன். நாரிகன் முதல் ரூபேன் வரை போராடிய மிதவாத போராட்டகாரர்களில், முதல் ஆயுதப் போராளி. செங்கோடியோடு உயிர்நீத்த செவ்வணக்கத்திற்குரிய தோழர்.

11. ஜெசி  இமானுவேலின் மகன். பாட்டியின் செல்ல சிட்டுக் குருவி. அப்பாவை போராட்டத்தில் இழந்தவன். தன்னையும் போராட்டத்தில் இணைத்து கொண்ட போராளி.

12ரூபி- ரூபேனின் மகள் வழி பேத்தி. ஜெசியின் காதல் மனைவி. பகட்டு பெற்றோரை விட்டு போராட்டத்தில் குதித்த பெண் போராளி.

ஜெசி,ரூபி காதல் ஒரு வரியில்…

“உண்மையான காதலர்கள் போராட்டக் களத்தை நோக்கியே செல்கின்றனர்”.

           உண்மையில் ஒவ்வொருவரும் தீண்டவேண்டிய இந்த தீண்டாத வசந்தத்தை நமக்கமக்களித்த தோழர் எத்திராஜூலுவிற்கு செவ்வணக்கங்களை உரிதாக்குவோம்.

“தீண்டப்பட வேண்டிய வசந்தம் #தீண்டாத_வசந்தம்