“இளமையின் கீதம்” புத்தக விமர்சனம் – ப்ரியா

0
995

இந்த உலகம் எப்பொழுதுமே அப்படியே இருப்பதில்லை, அது காலம் காலமாக மாற்றத்திற்கு உள்ளாகிக் கொண்டேஇருக்கின்றது. இந்த மாற்றத்திற்கு மூலப்பொருளாக உழைப்பும் உழைப்பு சுரண்டலும் இருந்துகொண்டே இருக்கின்றது. அது சுற்றுப்புறச்சூழலில் மட்டும் அல்ல சமூகம் மற்றும் தனிமனித உறவுகளுக்குள்ளும் மிகப்பெரிய மாற்றத்தைஏற்படுத்தியுள்ளது. தந்தை என்ற உறவே தனி சொத்துடமை என்னும் உழைப்பு சுரண்டலின் வித்தாக அமைந்தது.
அப்படி சீனாவின் கிராமம் ஒன்றி காலம் முழுவதும் உழைத்து உழைத்துக் களைத்து போன அந்தப் பெண்ணை குத்தகைபணம் கொடுக்கவில்லை என்று காரணம் காட்டிக் களவாடி சென்றான் அந்தக் கிழட்டு பண்ணையார். மற்றவர்களிடம்இருந்து தான் சுரண்டிய சொத்தை யாருக்க கொடுப்பது எனத் தெரியாமல் இரந்த அவனுக்கு இந்த இளம் பெண் பிள்ளைபெற்றுபோடும் உரு இயந்திரமானால்.

பெற்றவுடன் பிள்ளையை இழந்தால் சில நாட்களில் சுயநினைவை இழந்தால் பின் உயிரையே இழந்தால். இந்த முழுக்கதையும் அந்தக் குழந்தைக்கு ஒரு தம்பி பிறக்கும் வரை, அவளைப் பண்ணையாரும் அவரது மனைவியையும்கொடுமைப்படுத்தும் வரை தெரியாது.

ஆம் அப்படிப் பிறந்து, பெரியம்மாவின் கொடுமைக்கு உள்ளாகி வாழ்வின் எல்லாக் கொடுமைகளுக்கும் உள்ளாக்கியபோதிலும் தாய் நாட்டிற்காகவும், உழைக்கும் மக்களின் விடுதலைக்காகவும் போராட வேண்டும் என்ற லட்சியத்தில்அவள் மூழ்கினால்.

தன் பெரியம்மாவிடம் இருந்து தப்பித்த டாவோ சிங் ஒரு பழமைவாதியிடம் காதல் கொள்கிறாள். நாளாக நாளாக அவன்பிற்போக்கு தனத்தை வெறுக்கத் தொடங்கிய அவளுக்கு, சிவந்து கொண்டிருந்த சீனாவின் புரட்சிகர தோழர்களுடன்நட்பு ஏற்பட்டது.

அந்தப் புரட்சிகர இயத்தோடு, நாட்டின் விடுதலைக்காய் டாவோசிங்கின் பயணமே இந்த இளமையின் கீதம்.

இப்படி, எதையும் மிகைப்படுத்தாமல் நாம் நாள்தோறும் சந்திக்கும் கதாபாத்திரங்கள் அடிக்கடி தோன்றி மறைகின்றன இந்த கதையில். தனிப்பட்ட வாழ்க்கை போராட்டத்துக்கும் ஒட்டுமொத்த மக்கள் புரட்சிக்கும் இடையே டாவோ சிங் கடந்து வந்த பாதைகளையும், அவள் சந்தித்த பலத் தரப்பட்ட மனிதர்களை பற்றியும் நினைக்க வைக்கிறது கதை. புரட்சி, போராட்டம் மட்டுமின்றி காதல், மோதல், நட்பு, தோழமை, ஏமாற்றம் என அனைத்தையும் இளமையின் கீதத்தில் பிரதிபலித்துள்ளார் யாங் மோ. நாம் பார்த்து பழகிய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கிடையே எது உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி? கம்யூனிஸ்ட் கட்சி எப்படி செயல்பட வேண்டும்? என்பதை எடுத்துரைக்கிறது இளமையின் கீதம். தனிமையில் இருக்கும் இளம்பெண் டாவோசிங்கை விட, முதுமையில் இருக்கும் பேராசிரியர் வாங்-திருமதி வாங் தம்பதி குடும்பத்துடன் புரட்சியில் பங்கெடுத்தது அற்புதம். அடையாள போராட்டங்கள் தான் புரட்சிக்கு வழிவகுக்கும் என்ற சில முற்போக்காளர்களின் கருத்துக்களை அழித்து சீன புரட்சியின் படிநிலைகளை எடுத்துரைத்துள்ளது இளமையின் கீதம். டாவோ சிங்கை தவிர, அவளது தோழி சியாவோ யென், தோழர் லூ சியா சுவான், காட்டிக் கொடுக்கும் தய் யூ ஆகியோர் மனதில் ஆழப் பதிந்து விடுகிறார்கள். முதல் பாகத்தில் வந்து செல்லும் லூ சியா சுவானின் நினைவுகள் இறுதி வரை நிலைத்திருக்கிறது. இரண்டாம் பாகத்தில் லூ சியா சுவானை நினைவுப்படுத்துகிறது சியான் ஹூவா கதாபாத்திரம்.

தாய், வீரம் விலைந்தது போன்ற ரஷ்யா நாவல்களை போல் அல்லாமல் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த கதாநாயகியின் பயனம், நம்மோடு பொருத்தி பார்த்து கொள்ள செய்யும் சூழலும், மொழிபெயர்ப்பு நடையும், சீன புரட்சியை படிக்கும் ஆர்வத்தை தூண்டுகின்றத. இத்தகைய சிறந்த நாவலை சிறந்த முறையில் தமிழக்கம் செய்த்தன் மூலம் தோழர் மயிலை பாலு பொதுவுடமை இயக்கங்களுக்கு மிகப்பெரிய பணியை செய்துள்ளார்.