CMPC
POLITICS / அரசியல்

அன்புள்ள ரஜினி – ஆங்கிலத்தில்: அருண் ராம், தமிழில்

அன்புள்ள ரஜினி,

நீங்கள் உங்கள் அர்ஜூனனையும் கிருஷ்ணனையும் மோடி மற்றும் அமித் ஷாவிடம் கண்டுகொண்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் அவர்கள் இருவரில் யார் கிருஷ்ணர் யார் அர்ஜுனர் என்று உங்களுக்கே தெரியவில்லை. பரவாயில்லை அவர்களுக்கு மகாபாரதத்தில் சக்கர வியூகத்தை உடைத்த அர்ஜுனனின் மகன் அபிமன்யூவை போன்று தமிழக தேர்தல் களத்தில் நீங்கள் தேவைப்படுகின்றீர்கள்.

திராவிடம் பேசும் தமிழ்நாட்டின் தேர்தல் களத்தில் குருஷேத்திர போரை உதாரணமாக பேசுவது அபத்தம் தான். என்ன செய்வது பாஜக தங்களை தாங்களே பாண்டவர்களாக தானே எண்ணிக்கொண்டுடிருக்கிறார்கள். அவர்களிடம் சொல்லுங்கள் இங்குதேர்தல் களத்தில் கூட பிரிந்து கிடக்கும் இரண்டு கௌரவர் அணிகளுக்கு இடையேதான் தேர்தல் போர் நடைபெற்று விருகின்றது என்று. போர் இன்னும் தொடங்கப்படாத இந்த தருணத்திலேயே யார் கருஷ்ணர் யார் அர்ஜுனர் என்று உங்களால் கண்டுபிடிக்க முடியாமல் போனால், இங்கு துரியோதனன் யார், கர்ணன் யார் என்று உங்களால் கண்டுபிடிக்க முடியாமல் போகும்.

திராவிட கட்சிகளின் வியூகத்திற்குள் இருக்கும் தமிழகத்திற்குள் தங்களை தாங்களே பாண்டவர்கள் அணி என்று அழைத்துக்காள்கள்ளும் பாஜகவிற்கு நீங்கள் தான் அபிமன்யூவாக இருந்து உதவ முடியும். அதனால் உங்களுக்கு என்று ஒரு புதிய கட்சியை தொடங்குவதை நிறுத்திவிட்டு பாஜகவில் இணைந்து வேலை செய்யுங்கள். அது பாஜகவிற்கு நீங்கள் செய்யும் மிக பெரிய நன்மையாக இருக்கும். ஏன் என்றால் நீங்கள் அரசியலில் கருவாக இருக்கும் போதே வியூகங்களை உடைக்கும் தந்திரத்தை அறிந்தவர் ஆயிற்றே. அதே வேலையில் இப்படி சேர்வதால் உங்களுக்கு நன்மை ஏற்படும் என யாராவது சொன்னால் அதையும் நம்ப வேண்டாம்.

இந்த சுபத்திரை அபிமன்யூ கதையை மறந்து வடுங்கள், ( கருவில் இருந்த அபிமன்யூ எப்படி பாதியில் துங்கிவிட்டு வெளியே வர தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தான்.) உங்களுக்கு பாண்டவர்களை மிகவும் பிடிக்கும். அவர்கள் தோற்றாலும் சரி ஜெயித்தாளும் சரி. தேர்தல் போர் கலைகளை கற்றுதருவதில் மட்டும் கிருஷ்ணன் சிறந்தவன் அல்ல, அதன் நெறிமுறைகளை எப்படி மீறுவது என்பதை சொல்லி கொடுப்பதிலும் அவன் வல்லவன். அவன் மட்டுமல்ல அபிமன்யூவாக நீங்கள் மாறுபட்டசத்தில் உங்களுக்கு பல வித்தைகளை சொல்லி தர பல சொந்தங்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

1990களில் ரத யாத்திரை(அத்வானி) சென்ற தர்மன் இன்று ஓரங்கட்டப்பட்டு ஓய்வை அறிவித்துவிட்டிருக்கலாம் ஆனாலும் அவர் உங்களுக்கு பல பாடங்களை சொல்லி தரக்கூடம். தலைமை பதவியை பிடிக்க முயன்று தோற்று போன பீமன்( நிதின் கட்காரி) தனது 10 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பாரத்மாலா திட்ட பணிகளுக்கு இடையே உங்களுக்கு ஒன்றிரண்டு வித்தைகளை கற்று தரக்கூடும். இன்று அந்த கட்சியில் நகுலன் போல் உள்ள உயிரியல் மற்றும் தாவரவியலில் நிபுணரான முன்னாள் குஜராஜ் எம்பி உங்களுக்கு பசுவின் சாணமும் கோமியமும் எப்படி புற்று நோயை குனப்படுத்தும் என்பது பற்று சொல்லிதரலாம். ஏன் அவரின் இரட்டையர் சகாதேவன் (வாசுதேவ் தேவனானி முனனாள் ராஜஸ்தான் கல்வி அமைச்சர்) பசு ஆக்சிஜனை வெளியிடுவதால் தான் இவை அனைத்தும் சாத்தியம் என்று நிருபிக்க கூட சொல்லி தருவார்.

இப்படிபட்ட அறிவார்ந்த சூழலில் நீங்கள் சொல்லும் ஆன்மீக அரசியல் என்றால் என்னவென்று நீங்களே புரிந்து கொள்வீர்கள். உங்கள் ரசிகர்களை பற்றி கவலை படுகிரீர்களா? மக கவிஞன் கலில் ஜிப்ரான் வார்த்தைகளை நினைவில் கெள்ளுங்கள். ” நீங்கள் யாரையாவது விரும்புகின்றீர்கள் என்றால் அவர்களை போக விடுங்கள், அவர்கள் திரும்பி வந்தால் அவர்கள் எப்பொழுதும் உங்களுக்கானவர்கள், அப்படி வரவில்லை என்றால் எப்பொழுதும் அவர்கள் உங்களுக்கானவர்கள் இல்லை.” (இது உங்கள் ரசிகர்களுக்கும் பொருந்தும்.)

நீங்கள் அரசியலுக்கு வந்த பிறகும் திரைப்படங்களில் தொர்ந்து நடிக்கலாம்( வேதிக் திரில்லர் ஜானர் நன்றாக இருக்குமில்லையா?) பேரி கிரில்சுக்கு பதிலாக பிரதமருடன் மேன் vs வைல்ட் நிகழ்ச்சியில் காட்டிற்குள் ஒரு சுற்றுபயனம் செல்லலாம். நினைத்து பாருங்கள் அது போன்ற ஒரு தருணத்தில் புதர்களுக்கு நடுவே ஒளிந்துருக்கும் புலிக்கூட நீங்கள் கைஜாடை காட்டினலே போதும் சர்வத்தையும் அடக்கிக் கொண்டு போய்விடும், நீங்கள் சீவிடுவேன என்று சொல்லக்கூட வேண்டாம்.
போர்களத்தில் கலையிழந்து காணப்படும் தமிழக காவிப்படைக்கு நீங்கள் வந்தால் புதிய ஸ்டைல் கிடைக்கும். உங்களின் புகை பிடிக்கும் ஸ்டைல் உலக ஃபேமஸ் , ஆனால் அப்போது நீங்கள் பொதுவெளியில் புகைபிடிப்பதை நிறுத்தியுள்ளதால் உங்கள் ரசிகர்கள் கவலைகொள்ளலாம். கவலை வேண்டாம், இனி நீங்கள் சிகிரெட்டுக்கு பதிலாக தாமரையை தூக்கிப்போட்டு பிடிக்கலாம். தமிழகத்தில் கௌரவர்களின் அடையாளமாக கண்ணாடி உள்ளதென்று அதை அணியாமல் இருக்க வேண்டாம், பிரதமரே பல சமயங்களில் அதை அணிந்துகொண்டு தானே இருக்கிறார். வாருங்கள் சூப்பர்ஸ்டார் கௌரவர்கள் படையின் சக்கர வியூகத்தை உடைத்துகொண்டு போய் அவர்களை துவம்சம் செய்ய வாருங்கள்.

16 வயதில் சக்கர வியூகத்தை உடைத்த அபிமன்யூவை போன்றே உங்களாலும் முடியுமா என சந்தேகப்படுகின்றீர்களா? சந்தேகம் வேண்டாம் கீதையில் கிருஷ்ணன் ” இளமை முதுமை என்பதெல்லாம் ஆத்மா குடி கொண்டிருக்கும் உடலுக்குதான், அறிவாளி வயதை நம்புவதில்லை. என்று கூறியுள்ளார். இப்போதும் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா கவலை வேண்டாம் நமக்குதான் இயக்குனர் சங்கர் இருக்கின்றாரே பிறகு என்ன கவலை.

– ஆங்கிலத்தில் அருண் ராம்
தமிழில் அருண் மொழி வர்மன்

Related posts

தேவை: மாநில சுயாட்சி

CMPC EDITOR

ஜல்லிக்கட்டு அரசியல்

CMPC EDITOR

கடன்கார நாடும்… கைவிரிக்கும் கார்ப்பரேட்களும்…

CMPC EDITOR