அறிவியலுக்குப் புறம்பான கருத்துகளுக்கு எதிராக குரல் கொடுத்த மணிப்பூர் பத்திரிகையாளர் கைதுக்கு கண்டனம்

0
2

மாட்டு மூத்திரமும், சாணமும் கொரோனாவை குணப்படுத்தாது என முகநூலில் பதிவிட்டதற்காக மணிப்பூரை சேர்ந்த பத்திரிக்கையாளர் கிஷோர் சந்திரவாங்கெம், அம்மாநில காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். ஒரு பத்திரிகையாளர் என்ற அடிப்படையில் மட்டுமல்ல, ஒரு இந்திய குடிமகனாகவே அனைவரும் கண்டிக்க வேண்டிய நிகழ்வு இது. அறிவியல் உண்மைகளை வெளிப்படுத்தியதற்காக தாக்குதல் நடத்தும் அளவிற்கு இந்திய சமூகம் 18 ஆம் நூற்றாண்டிற்கு முந்தைய காலத்திலேயே தேங்கியிருப்பதை எண்ணி ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டும்.

இந்த கொரோனா பேரிடரில், இந்தியாவின் செயல்பாடுகளை உலகமே விமர்ச்சித்து வரும் நிலையில், எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, மேலும் கேலி கிண்டலுக்கு உள்ளாக்கும் இந்த செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். பாஜகவினரும், அவர்களின் உத்தரவுகளுக்கு பணியும் காவல்துறை உள்ளிட்ட அரச அமைப்புகளும், இந்தியாவை சர்வதேசத்தின் முன் அவமானப்படுத்தும் வகையில் நடந்து கொள்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

உடனடியாக மணிப்பூர் பத்திரிகையாளர் கிஷோர் சந்திர வாங்கெம்மை விடுதலை செய்து, அவரிடம் தார்மீகரீதியில் அம்மாநில போலீசார் மன்னிப்பு கேட்க வேண்டும்.